• Wed. Dec 31st, 2025

24×7 Live News

Apdin News

பேராசிரியர் நிஷான் கனகராஜாவுக்கு இங்கிலாந்தில் ‘Sir’ பட்டம் – 2026 கிங்ஸ் நியூ இயர் ஆனர்ஸில் கௌரவம்

Byadmin

Dec 31, 2025


இலங்கையில் பிறந்த யுனிவர்சிட்டி ஆஃப் லெஸ்டரின் President மற்றும் Vice-Chancellor ஆன பேராசிரியர் நிஷான் கனகராஜா, 2026 ஆம் ஆண்டுக்கான கிங்ஸ் நியூ இயர் ஆனர்ஸ் (King’s New Year Honours) பட்டியலில் Knighthood வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

உயர்கல்வித் துறையில் அவர் செய்த சிறப்பான சேவைகளுக்கும், “அனைவரையும் உள்ளடக்கும் கல்வி” தொடர்பான அவரது தொடர்ச்சியான முயற்சிகளுக்கும் இந்த உயரிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நவம்பர் 2019 முதல் யுனிவர்சிட்டி ஆஃப் லெஸ்டரை (University of Leicester) வழிநடத்தி வரும் பேராசிரியர் கனகராஜாவின் தலைமையில், அந்த பல்கலைக்கழகம் நாட்டிலேயே மிக அதிக diversity கொண்ட உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. இங்கு கல்வி பயிலும் மாணவர்களில் பெரும்பாலானோர் பின்தங்கிய பகுதிகளிலிருந்தும், 69 சதவீத சிறுபான்மை இனப் பின்னணியிலிருந்தும் வருபவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. கல்வி என்பது மனிதர்களின் வாழ்க்கையை மாற்றும் சக்தி என்றும், சமத்துவமான சமூகத்தை உருவாக்கும் முக்கிய கருவி என்றும் பேராசிரியர் நிஷான் கனகராஜா ஆழமாக நம்பி செயல்பட்டு வருகிறார்.

அவரது வழிகாட்டுதலின் கீழ், யுனிவர்சிட்டி ஆஃப் லெஸ்டர் மூன்று முறை ‘University of the Year’ விருதுகளை வென்றதுடன், Teaching Excellence Framework Gold மதிப்பீட்டையும், Research Excellence Framework-இல் முன்னணி 30 இடங்களையும் பெற்றுள்ளது. இதன் மூலம் கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆகிய இரு துறைகளிலும் பல்கலைக்கழகம் முக்கிய முன்னேற்றத்தை கண்டுள்ளது.

லெஸ்டரில் முதல் ‘IntoUniversity’ மையத்தை நிறுவிய அவர், பெரும் தொண்டு நிதியை பெற்றுத் தந்து, 1,000-க்கும் மேற்பட்ட பின்தங்கிய இளைஞர்களுக்கு கல்வி ஆதரவை வழங்கினார். மேலும், பல்கலைக்கழகத்தின் முதல் பெண் சான்ஸலராக டேம் டாக்டர் மேகி அடெரின்-போகொக் அவர்களை நியமித்து, இரண்டு பெண் துணைவேந்தர்கள் அடங்கிய உள்ளடக்கமான நிர்வாகக் குழுவை உருவாக்கினார்.

பல்கலைக்கழக நிர்வாகத்துடன் மட்டுமல்லாமல், தேசிய அளவிலும் உயர்கல்விக்கான பல முக்கிய பொறுப்புகளை பேராசிரியர் கனகராஜா வகித்துள்ளார். 2025 ஆம் ஆண்டு UCEA அமைப்பின் Chairpersonஆக அவர் பணியாற்றியதுடன், இதற்கு முன் The Conversation அமைப்பின் Chairperson ஆகவும், Universities UK Board-ன் உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார்.

இலங்கையில் பிறந்து கல்வி கற்ற அவர், பின்னர் ஐக்கிய இராச்சியத்திற்கு குடிபெயர்ந்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 1989 ஆம் ஆண்டு BA (Hons) பட்டமும், 1993 ஆம் ஆண்டு PhD பட்டமும் பெற்றார். அவரது கல்வி மற்றும் ஆராய்ச்சி வாழ்க்கை 1993 இல் University of Bristol-இல் Research Assistant ஆகத் தொடங்கி, அதன் பின்னர் பல்வேறு முக்கிய கல்வி மற்றும் நிர்வாக பதவிகளுக்கு உயர்ந்தது.

கௌரவம் குறித்து பேராசிரியர் நிஷான் கனகராஜா

இந்த கௌரவம் குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், “ஒரு காலத்தில் போர் நடைபெற்ற நாட்டில் இருந்து வந்த ஒரு சிறுவன், அரச குடும்பத்தால் கௌரவிக்கப்படுவது உண்மையிலேயே அபூர்வமான பயணம். கல்வியின் மாற்றத்திறனும் அது வழங்கும் வாய்ப்புகளும் இல்லையெனில் இது சாத்தியமாகியிருக்காது. அதனால்தான், பிறரும் தங்கள் முழு திறனையும் வெளிப்படுத்தும் வகையில் தடைகளை அகற்ற நான் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படுவேன்” என்று கூறினார்.

By admin