• Tue. Jan 20th, 2026

24×7 Live News

Apdin News

பேருந்தில் உரசியதாக வெளியான வீடியோவால் இளைஞர் மரணம் என புகார்; கேரளாவில் நடந்தது என்ன?

Byadmin

Jan 20, 2026


கேரளா, இளைஞர் மரணம்

பட மூலாதாரம், Ashkar

(எச்சரிக்கை: இக்கட்டுரையில் தற்கொலை குறித்த விவரணைகள் உள்ளன)

கேரளாவில் ஓடும் பேருந்தில் கூட்ட நெரிசலில் தன்னை பாலியல் நோக்கத்துடன் சீண்டியதாக, ஒரு பெண் சமூக ஊடகங்களில் பதிவிட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இளைஞர் தூக்கிட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.

சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்துள்ள கேரள காவல்துறை, இறந்துபோன நபரின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், தற்கொலைக்கு தூண்டியதாக அந்த பெண் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளது. தலைமறைவாகவுள்ள அந்தப் பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, கேரளாவில் இரு தரப்பினருக்கும் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் சமூக ஊடகங்களில் பெரும் கருத்துப் போர் நடந்து வருகிறது.

இவ்வழக்கை கேரளாவின் வடக்கு மண்டல டிஐஜி விசாரிக்க வேண்டுமென்று மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இறந்து போன தீபக், திருமணமாகி 3 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்தானவர், அவர் மீது இத்தகைய புகார்கள் வேறு எதுவுமே வந்ததில்லை என்றும் பிபிசி தமிழிடம் அவருடைய நண்பர்கள் தெரிவித்தனர்.



By admin