• Wed. Mar 26th, 2025

24×7 Live News

Apdin News

பேஸ்புக் களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட 76 பேர் கைது

Byadmin

Mar 24, 2025


பேஸ்புக் களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட  சிறுமிகள் உட்பட 76 இளைஞர்கள் நேற்று சனிக்கிழமை (22) இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

சீதுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிடிகொட பெல்லனவத்த பகுதியில் ஹோட்டல் ஒன்றில் இளைஞர்கள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேஸ்புக் களியாட்ட நிகழ்வு நேற்றையதினம் இரவு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றிவளைப்பில் 15 பெண்கள் உட்பட 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து இருந்து ஐஸ், கேரளா கஞ்சா ஆகிய போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை வைத்திருந்த 03 பெண்களும் 14 ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு,  இந்த களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட 12 சிறுமிகள் மற்றும் 47 இளைஞர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் 18 முதல் 25 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் கொழும்பின் புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

By admin