• Thu. Sep 11th, 2025

24×7 Live News

Apdin News

பைக்கில் செல்பவர்கள் கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர்: புழுதிவாக்கத்தில் மோசமான சாலையால் மக்கள் அவதி | People suffer due to damaged roads in Puzhuthivakkam

Byadmin

Sep 11, 2025


சென்னை: புழு​தி​வாக்​கத்​தில் மோச​மான சாலை​யால் வாகன ஓட்​டிகள், பொது​மக்​கள் தின​மும் கடும் அவதிப்​பட்டு வரு​கின்​றனர். சென்னை மாநக​ராட்​சி, 14வது மண்​டலம், 186-வது வார்​டு, பஜனை கோயில் தெரு உள்​ளிட்ட பல்​வேறு பகு​தி​களில் சாலை அமைக்கும் பணி சமீபத்​தில் தொடங்​கப்​பட்​டது.

இதில், பல்​வேறு சாலைகள் அமைக்​கப்​பட்​டு​விட்ட நிலை​யில், பஜனை கோயில் தெரு​வில் மட்​டும் இன்​னும் சாலை அமைக்​கப்​பட​வில்​லை. ஏற்​க​னவே பயன்​படுத்த முடி​யாத நிலை​யில் இருந்த புழு​தி​வாக்​கம் பேருந்து நிலை​யத்​துக்கு செல்​லும் இந்த பிர​தான சாலை​யில், மில்​லிங்பணி தொடங்கி சாலை பணி முழு​மை​யாக முடிக்​கப்​பட​வில்​லை.

கடந்த சில நாட்​களாக பெய்த மழை​யில் சாலை முற்​றி​லும் பயன்​பாடற்ற நிலைக்கு மாறி​விட்​டது. சேறும், சகதி​யு​மாக​வும், குண்டும், குழி​யு​மாக​வும் படு மோச​மான நிலை​யில் சாலை உள்​ளது. வாகன ஓட்​டிகள் சாலை​யில் உள்ள மேடு, பள்​ளம் தெரியாமல், விபத்​துகளில் சிக்​கும் நிலை​ ஏற்​படு​கிறது. குறிப்​பாக, இருசக்கர வாக​னங்​களில் செல்​பவர்​கள், கீழே விழுந்து படுகாயம் அடைகின்​றனர். சென்னை மாநக​ராட்சி இந்த சாலையை சரிசெய்​யாமல் இருப்​பது, பொதுமக்​களிடம் அதிருப்​தியை ஏற்படுத்தியுள்​ளது.

இதுகுறித்​து, அப்​பகுதி மக்​கள் கூறுகையில், “குடிநீர் வாரி​யம் – சென்னை மாநக​ராட்சி இடையே ஒருங்​கிணைப்பு இல்​லாத​தால், இந்த சாலை சீரமைப்​ப​தில் கால​தாமதம் ஏற்​பட்​டுள்​ளது. சாலை அமைப்​ப​தற்கு முன் குடிநீர் பணி​களை வாரி​யம் முடித்​திருக்க வேண்​டும். ஆனால், அவர்​களின் கால தாமதத்​தால், இந்த பிரச்னை ஏற்​பட்​டுள்​ளது.

இந்த வார்டு மாமன்ற உறுப்​பினரும் இந்த மோச​மான சாலை​யில் வாகன ஓட்​டிகள், பொது​மக்​கள் படும் அவதியை கண்டு கொள்​வ​தில்​லை. இந்த சாலை​யில் உயிரை கையில் பிடித்து கொண்டு இருசக்கர வாக​னங்​களில் செல்​கிறோம். சென்னை மாநக​ராட்சி ஆணை​யர் இதில் தலை​யிட்டு உரிய தீர்வு காண வேண்​டும்” என்​றனர்.

இது குறித்​து, 14வது மண்டல உதவி பொறி​யாளர் கூறியது: பஜனை கோயில் தெரு உள்​ளிட்ட பல்​வேறு சாலைகளில் சாலை அமைப்​ப​தற்​காக தேர்வு செய்​யப்​பட்ட இடங்​கள் குறித்து குடிநீர் வாரி​யத்​திற்கு தகவல் தெரி​வித்து இருந்​தோம். முதல் கட்​ட​மாக மில்​லிங் பணியை மேற்​கொண்​டோம். அந்த வகை​யில் தான் பஜனை கோயில் தெரு​விலும் மில்​லிங் செய்​யப்​பட்​டது. மில்​லிங் செய்​யப்​பட்ட பிறகு வாரிய அதி​காரி​கள் குடிநீர் பைப் லைன் புதி​ய​தாக போடப்​பட​வேண்​டுமென கூறி, அதற்கு உண்​டான கட்டணம் ரூ. 98 லட்​ச​மும் செலுத்​தி​விட்​டனர்.

வாரி​யம் கேட்​டுக் கொண்​ட​தால், நாங்​கள் சாலை அமைக்​க​வில்​லை. ஓரிரு தினங்களில் பணி​கள் முடிவுறும் என எதிர்பார்க்கிறோம். முடிந்​தவுடன் சாலை அமைக்​கப்​படும் என தெரி​வித்​தார்​. இதே கருத்​தை மாமன்​ற உறுப்​பினர்​ ஜெ. கே மணி​கண்​டனும் தெரி​வித்​தார்​.



By admin