• Thu. Jan 9th, 2025

24×7 Live News

Apdin News

பொங்கல் திரைப்படங்கள் 2025: கதை என்ன? கேம் சேஞ்சர், மதகஜராஜா, வணங்கான் எப்போது வெளியாகிறது?

Byadmin

Jan 8, 2025


பொங்கல் வெளியீடு திரைப்படங்கள் சொல்லும் கதை என்ன? இறுதிப் பட்டியலில் எத்தனை படங்கள்?

பட மூலாதாரம், Gemini

  • எழுதியவர், கார்த்திக் கிருஷ்ணா
  • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழ் சினிமாவுக்கு 2025 பொங்கல் விசேஷமானதாக இருக்கும் என்று சினிமா ஆர்வலர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டுத் திரைக்கு வரவுள்ள படங்களின் எண்ணிக்கையே அதற்குக் காரணம்.

இந்தப் பொங்கலுக்கு என்னென்ன திரைப்படங்கள் வெளியாகவுள்ளன, அதில் நடித்திருப்பவர்கள், அதன் இயக்குநர்கள் யார் யார், அந்தப் படங்கள் சொல்ல வரும் கதை என்ன?

இம்முறை செவ்வாய்க்கிழமை அன்று பொங்கல் பண்டிகை வருவதால், 10-ஆம் தேதியில் இருந்தே படங்கள் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளன. இதோடு 17-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்றும் தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளதால் முந்தைய வார இறுதியோடு சேர்த்து கிட்டத்தட்ட 10 நாட்களும் விடுமுறை நாட்களாகவே பார்க்கப்படுகிறது.

By admin