• Tue. Nov 11th, 2025

24×7 Live News

Apdin News

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில்களில் முன்பதிவு தொடக்கம் | Bookings for trains begin for Pongal festival

Byadmin

Nov 11, 2025


சென்னை: ஜனவரி​யில் பொங்​கல் பண்​டிகை​யின்​போது ரயில்​களில் சொந்த ஊர் செல்​வதற்​கான டிக்​கெட் முன்​ப​திவு நேற்று தொடங்​கியது.

வரும் 2026-ல் ஜன.13-ம் தேதி போகிப் பண்​டிகை, 14-ல் தைப்​பொங்​கல், 15-ல் மாட்​டுப்​ பொங்​கல், 16-ல் உழவர் திரு​நாள் கொண்​டாடப்பட உள்ளது. இதையொட்​டி, சென்னை உட்பட பல்​வேறு நகரங்​களில் இருந்​தும் பல லட்​சம் பேர் சொந்த ஊருக்​குச் செல்​வது வழக்​கம். ஜன.12-ம் தேதி திங்​கள்​கிழமை​யும் விடுப்பு கிடைக்​கும் சூழல் உள்​ளவர்​கள், 9-ம் தேதி வெள்​ளிக்​கிழமை புறப்பட திட்​ட​மிடு​வார்​கள்.

விரைவு ரயில்​களில் 60 நாட்​களுக்கு முன்பே முன்​ப​திவு செய்​யும் வசதி உள்ள நிலை​யில், ஜன.9-ம் தேதி பயணம் மேற்​கொள்​வதற்​கான டிக்​கெட் முன்​ப​திவு நேற்று தொடங்​கியது. ரயில் நிலை​யங்​களில் உள்ள டிக்​கெட் கவுன்ட்​டர்​கள் மற்​றும் ஐஆர்​சிடிசி இணை​யதளம் வாயி​லாக முன்​ப​திவு விறு​விறுப்​பாக நடை​பெற்​றது. இதுகுறித்து தெற்கு ரயில்வேஅதி​காரி​கள் கூறிய தாவது: ரயில் பயணத்​துக்கு 60 நாட்​கள் முன்பு முன்​ப​திவு செய்ய முடி​யும் என்​ப​தால், மக்​கள் முன்​ப​திவு செய்து வரு​கின்​றனர். நவ.13, 14-ம் தேதிகளில் அதிகம் பேர் முன்​ ப​திவு செய்​வார்​கள் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. அது​போல, பொங்​கல் பண்​டிகை முடிந்து ஜன. 17, 18-ல் திரும்​புவோர் வரும் 18, 19-ம் தேதி​யன்று முன்​ப​திவு செய்​வார்​கள்.

காத்​திருப்போர் பட்​டியல், பயணி​கள் தேவையை கருதிகூடு​தல் பெட்​டிகளை இணைக்கநடவடிக்கை எடுக்​கப்​படும். டிசம்​பர் இறு​தி​யில் சிறப்பு ரயில்​கள் அறிவிக்​கப்​படும்.



By admin