• Sun. Sep 14th, 2025

24×7 Live News

Apdin News

பொதுமக்களின் குரல் உங்களுக்கு கேட்கிறதா முதல்வரே? – திருச்சி பிரச்சாரத்தில் தவெக தலைவர் விஜய் கேள்வி | TVK Vijay election campaign in trichy

Byadmin

Sep 14, 2025


திருச்சி: பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டம் போன்ற வாக்​குறு​தி​கள் என்​ன​வா​யிற்​று, மக்​களின் குரல் கேட்​கிறதா முதல்​வரே என்று திருச்சி பிரச்​சா​ரத்​தில் தவெக தலை​வர் விஜய் ஆவேசத்​துடன் கேள்வி எழுப்​பி​னார்.

திருச்​சி​யில் நேற்று தனது பிரச்​சா​ரப் பயணத்தை தொடங்​கிய விஜய், மரக்​கடை எம்​ஜிஆர் சிலை அருகே திரண்​டிருந்த தொண்​டர்​கள், ரசிகர்​கள் மத்​தி​யில் பேசி​ய​தாவது: அந்​தக் காலத்​தில் போருக்கு போகும் முன்பு வெற்​றிக்​காக குலதெய்வ கோயிலுக்​குச் செல்​வார்​கள். அது​போல, தேர்​தலுக்கு முன் மக்​களை சந்​திக்க வந்​துள்​ளேன்.

நல்ல விஷ​யங்​களை திருச்​சி​யில் தொடங்​கி​னால் திருப்​பு​முனை​யாக அமை​யும் என்​பார்​கள். தேர்​தலில் போட்​டி​யிடலாம் என 1956-ல் அண்ணா முடி​வெடுத்​தது திருச்​சி​யில்​தான். எம்​ஜிஆர் 1974-ல் முதல் மாநாடு நடத்​தி​யதும் திருச்​சியில்தான். திருச்சிக்கு நிறைய வரலாறு இருக்​கிறது. பெரி​யார் வாழ்ந்த இடம் இது. மதச் சார்​பின்​மைக்​கும், நல்​லிணக்​கத்​துக்​கும் பெயர்​போன இடம். கொள்கை உள்ள மண் இது.

2021 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுக 505 தேர்​தல் வாக்​குறு​தி​களை கொடுத்​தது. டீசல் விலை லிட்​டருக்கு ரூ.3 குறைப்​பு,மாதாந்​திர மின் கட்​ட​ணம் கணக்​கீடு, கல்விக் கடன் ரத்​து, நீட் ரத்​து, அரசு வேலை​யில் பெண்​களுக்கு இடஒதுக்​கீடு, பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டம், 2 லட்​சம் காலி பணி​யிடங்​கள் நிரப்​புவது போன்ற பல வாக்​குறு​தி​கள் என்​ன​வானது?

இது​போல கேள்வி கேட்​டுக் கொண்டே இருந்​தா​லும், திமுக​விடம் இருந்து எந்த பதி​லும் வரப்​போவ​தில்​லை. மக்​களின் குரல் கேட்​கிறதா முதல்​வரே? திமுக-வைச் சேர்ந்​தவருக்கு சொந்​த​மான மருத்​து​வ​மனை​யில் கிட்னி திருட்டு நடை​பெற்​றுள்​ளது. பேருந்​தில் பெண்​களை இலவச​மாக அனு​ம​தித்​து​விட்டு ‘ஓசி… ஓசி..’ என்று சொல்லி அவமானப்​படுத்​துகிறார்​கள். அனைத்து மகளிருக்​கும் ரூ.1,000 தரு​வ​தில்​லை. கொடுத்த சிலருக்​கும் சொல்​லிக் காட்​டு​கிறார்​கள்.கல்​வி, மின்​சா​ரம், மருத்​து​வம் போன்ற அடிப்​படைத் தேவை​களை தவெக செய்​து​கொடுக்​கும்.

பெண்​கள் பாது​காப்​பிலும், சட்​டப் பிரச்​சினை​களி​லும் சமரசம் கிடை​யாது. நடை​முறைக்கு எது சாத்​தி​யமோ, அதையே நாங்​கள் சொல்​வோம். வெற்றி நிச்​ச​யம். இவ்​வாறு அவர் பேசி​னார்.

ரசிகர்​கள் அதிருப்​தி… விஜய் பேசத் தொடங்​கிய​வுடன் மைக் சரி​யாக வேலை செய்​யாததால் அவர் சில நிமிடங்​கள் மட்​டுமே பேசி​னார். இதனால், பல மணி நேரம் காத்திருந்த ரசிகர்​கள், தொண்​டர்​கள் அதிருப்​தி​அடைந்​தனர். முன்​ன​தாக, சென்​னையி​லிருந்து தனி விமானம் மூலம் விஜய் நேற்று காலை 9.40 மணி​யள​வில் திருச்சி விமான நிலை​யம்வந்​தார். அவரை வரவேற்க விமானநிலை​யம் முதல் மரக்​கடை வரைசாலை​யின் இரு​புற​மும் கட்​சித் தொண்​டர்​கள், ரசிகர்​கள் ஏராள​மானோர் திரண்​டிருந்​தனர்.

இதனால், அவர் 8 கி.மீ. தொலை​வைக் கடக்க சுமார் 5 மணி நேர​மானது. இதனால், விஜய் பிரச்​சா​ரம் மேற்​கொள்ள காலை 10.30 மணி முதல் 11 மணி வரை காவல் துறை​யினர் அனு​ம​தித்​திருந்த நிலை​யில், பிற்​பகல் 3 மணிக்​குத்​தான்​ அவரால்​ பேச முடிந்​தது.

போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி: திருச்சியில் நேற்று பிரச்சாரம் செய்வதற்காக தவெக தலைவர் விஜய் வந்தபோது, காவல் துறை விதித்த நிபந்தனைகளை அவரது தொண்டர்கள், ரசிகர்கள் காற்றில் பறக்கவிட்டனர். இதனால், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். மேலும், மரக்கடை பகுதியில் உள்ள கட்டிடங்கள், காம்பவுண்ட் சுவர்கள், மரங்கள் மீது தவெக தொண்டர்கள், ரசிகர்கள் ஆபத்தான முறையில் ஏராளமானோர் ஏறி நின்றிருந்தனர்.

கூட்ட நெரிசலில் புத்தூரைச் சேர்ந்த ஹரிணி என்ற பெண் உள்ளிட்ட 15 பேர் மயக்கமடைந்தனர். சையது முர்துசா பள்ளி ஆஸ்பெஸ்டாஸ் சீட் மீது ஏறி நின்ற 2 இளைஞர்கள் கீழே விழுந்து காயமடைந்தனர். அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பேசியதாக விஜய் மீது வழக்குப் பதிவு செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.



By admin