• Fri. Aug 22nd, 2025

24×7 Live News

Apdin News

“பொது கழிப்பறையை விட வீட்டு கழிப்பறை ஆபத்தானது” – காரணத்துடன் விளக்கும் சுகாதார நிபுணர்கள்

Byadmin

Aug 22, 2025


கழிப்பறை இருக்கைகளிலிருந்து நோய்கள் பரவுமா?

பட மூலாதாரம், Getty Images

ஒரே நாளில் நூற்றுக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் கழிப்பறை இருக்கையில் அமரும்போது, கழிப்பறையில் நோய்க்கிருமிகள் எவ்வளவு நேரம் உயிர்வாழும் என நீங்கள் யோசிக்கலாம்.

பொது கழிப்பறையில் கால் வைத்தவுடன் ஏற்படும் “மோசமான” உணர்வை தவிர்க்க முடியாது. கழிவறையின் இருக்கையிலும் தரையிலும் சிறுநீர் தெறித்திருப்பது, வேறொருவரின் உடல் திரவங்களின் கடுமையான வாசனை போன்றவை உங்கள் புலன்களைத் தாக்கி, அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

இதைச் சமாளிக்க, சிலர் முழங்கையால் கதவைத் திறப்பார்கள், காலால் தண்ணீர் குழாயை திறப்பார்கள், அல்லது முழு இருக்கையையும் கழிப்பறை காகிதத்தால் மூடி வைப்பார்கள்.

மிகவும் அருவருப்பாக இருந்தால், இருக்கையில் உட்காராமல் பயன்படுத்த முயற்சிப்பார்கள்.

By admin