• Sun. Jan 19th, 2025

24×7 Live News

Apdin News

பொன்னுக்கு வீங்கி நோய்: தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் இந்த நோயால் என்ன ஆபத்து?

Byadmin

Jan 18, 2025


பொன்னுக்கு வீங்கி நோய் தமிழ்நாட்டில் அதிகரிக்குமா?

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பொன்னுக்கு வீங்கி நோயின் பரவல் அதிகரித்து வருகிறது. அரசு தடுப்பூசி திட்டத்தின் கீழ் பொன்னுக்கு வீங்கி சேர்க்கப்படாதது இந்த அதிகரிப்புக்கான முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

இதனால் வரும் காலங்களிலும் இந்த நோயின் பரவல் அதிகமாக இருக்கலாம் என்று மூத்த மருத்துவர்களும், துறை சார்ந்த நிபுணர்களும் எச்சரிக்கின்றனர்.

அரசு திட்டத்தில் புதிய தடுப்பூசிகளைச் சேர்ப்பது குறித்து மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும் என்று மாநில சுகாதாரத்துறை கூறுகிறது. இந்த நோய்ப் பரவலைக் கண்டறிய, இந்த நோயை ‘தெரிவிக்கப்பட வேண்டிய நோயாக’ மாநில அரசு அறிவிக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் சிலர் வலியுறுத்துகின்றனர்.

பொன்னுக்கு வீங்கி வெகு காலமாக சமூகத்தில் இருந்து வரும் நோயாகும். பொதுவாக குழந்தைகளிடம் இந்த நோய் காணப்பட்டாலும் பெரியவர்களுக்கும் தீவிர பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். இந்த நோய் மலட்டுத் தன்மையை, குறிப்பாக ஆண்களிடையே அதிகம் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதால், இதன் பரவலை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.



By admin