0
சிலர் அரிசி பொரி சாப்பிட்டால் உடல் எடையை குறையும் என்று கூறிவரும் நிலையில் அது உண்மையா என்பதை மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
பொதுவாக பொரியில் கார்போஹைட்ரேட், இரும்பு சத்து, கால்சியம் சத்துக்கள் உள்ளன. ஆனால் அரிசி சாப்பிடுவதற்கும் பொரி சாப்பிடுவதற்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருக்காது.
100 கிராம் அரிசியை சாதமாக வடித்து சாப்பிட்டால் வயிறு நிறைந்த உணர்வு ஏற்படும். ஆனால் அதே 100 கிராம் பொரி சாப்பிட்டால் அந்த உணர்வு ஏற்படாது. எனவே அரிசி பொரியை அளவாக ஸ்நாக்ஸ் மாதிரி சாப்பிட்டுக் கொள்ளலாம். மற்ற ஸ்நாக்ஸ்கள் சாப்பிடுவதால் உடலுக்கு தீங்கு என நினைப்பவர்கள் நொறுக்கு தீனியாக அரிசி பொரியை சாப்பிடலாம்.
ஆனால் அதே நேரத்தில் அரிசி பொரியில், ஓமப்பொடி மிக்சர் தட்டை ஆகியவற்றை சேர்த்து சாப்பிடக்கூடாது. அரிசி பொரி சாப்பிடுவதால் உடல் எடை குறையும் என்பது தவறான தகவல். ஆரோக்கியம் அற்ற நொறுக்கு தீனிகளை சாப்பிடுவதற்கு பதில் பொரி சாப்பிடலாம். அவ்வளவுதான். ஆனால் அதே நேரத்தில் அதில் சோடியம் அதிகம் இருக்கும் என்பதால் குறைந்த அளவு பொரி மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.