• Wed. Mar 26th, 2025

24×7 Live News

Apdin News

பொறுப்புக்கூறலை நோக்கிய முக்கியமான நடவடிக்கை | பிரிட்டனின் தடைகள் குறித்து கனடாவின் நீதியமைச்சர்

Byadmin

Mar 25, 2025


இலங்கை அதிகாரிகளிற்கு எதிராக பிரிட்டன் விதித்துள்ள தடைகளை வரவேற்றுள்ள கனடாவின் நீதியமைசர் ஹரி ஆனந்தசங்கரி  இலங்கையில் பொறுப்புக்கூறலை நோக்கிய மற்றுமொரு முக்கியமான நடவடிக்கை இது என தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக பதிவில்அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

இலங்கை அதிகாரிகளிற்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதித்துள்ளதை நான் வரவேற்கின்றேன் .

இலங்கையில் பொறுப்புக்கூறலை நோக்கிய மற்றுமொரு முக்கியமான நடவடிக்கைஇது.

2023 இல் கனடா மகிந்த ராஜபக்ச கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக விதித்த தடைகளை தொடர்ந்து பிரிட்டனும் தடைகளை விதித்துள்ளது.

இலங்கையில் தண்டனையின் பிடியிலிருந்து விடுவிக்கப்படும் கலாச்சாரத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கும்,சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும் கனடா தொடர்ந்து பாடுபடும்.

By admin