• Thu. May 22nd, 2025

24×7 Live News

Apdin News

பொற்கோவில் வளாகத்தில் ராணுவம் ஆயுதங்களை நிலைநிறுத்தியதா? உண்மை என்ன?

Byadmin

May 22, 2025


அமிர்தசரசில் உள்ள பொற்கோவில்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்

அமிர்தசரஸில் உள்ள ஸ்ரீ தர்பார் சாஹிப் வளாகத்தில் ராணுவம் எந்த வகையான வான் பாதுகாப்பு துப்பாக்கிகளையும் நிலைநிறுத்தவில்லை என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

திங்களன்று, இந்திய ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் சுமர் இவான் ஏஎன்ஐ செய்தி முகமைக்கு அளித்த பேட்டியின் போது வெளியிடப்பட்ட ஒரு தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியது.

“அண்மையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவிய சமயத்தில், ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப்பின் (பொற்கோவிலின்) தலைமை மதகுரு (கிரந்தி), வான் பாதுகாப்பு துப்பாக்கிகளை நிறுவ எங்களுக்கு அனுமதி அளித்தார்” என்று இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் சுமர் இவான் கூறியிருந்தார்.

இந்தக் கூற்றை சிரோமணி குருத்வாரா பர்பந்தக் குழுவின் நிர்வாகிகள் முற்றிலுமாக மறுத்துள்ளனர். அதற்குபிறகு, இந்திய ராணுவம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், “பொற்கோவில் வளாகத்தில் வான் பாதுகாப்பு துப்பாக்கிகள் உட்பட ஆயுதங்கள் பொருத்தப்பட்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.”

By admin