பொலிஸ் அனுமதி விண்ணப்பத்திற்கான இணையவழி முறை தொழில்நுட்ப கோளாறு காரணத்தால் செயலிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் அனுமதிக்கான விண்ணப்பங்களை இணையவழி முறை மூலம் மட்டுமே விண்ணப்பிக்கப்படுகின்றன.
இணையவழி முறை நேற்று வெள்ளிக்கிழமை (10) அதிகாலை முதல் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயலிழந்துள்ளது.
இலங்கை பொலிஸ் தற்போது இந்த செயலிழப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதுடன், விண்ணப்பதாரர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளது.
தொழிநுட்ப கோளாறு சரிசெய்தவுடன், மீண்டும் அறிவிக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
The post பொலிஸாரிடமிருந்து முக்கிய அறிவித்தல்! appeared first on Vanakkam London.