• Sun. Apr 20th, 2025

24×7 Live News

Apdin News

பொலிஸார் துரத்தல்: விபத்தில் ஒருவர் பலி; ஆறு பேர் காயம்

Byadmin

Apr 20, 2025


வெள்ளிக்கிழமை இரவு தெற்கு இலண்டனில் இரண்டு கார்கள் மோதியதில், பொலிஸாரால் துரத்தப்பட்ட காரை ஓட்டிய சாரதி இறந்தார்.

ஷெர்லி வீதி சந்திப்பிற்கு அருகில், க்ராய்டனின் விக்ஹாம் வீதியில் நடந்த இந்த சம்பவத்தில், மற்ற வாகனங்களில் இருந்த ஆறு பேர் காயமடைந்ததுடன், ஒருவர் படுகாயமடைந்தார் என்று மெட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த 63 வயதான நபர் தனது காரில் குளோன் செய்யப்பட்ட நம்பர் பிளேட்களைப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது.

அவரது காரில் இருந்த ஏனைய இரண்டு 61 வயதுடைய இருவரும், திருடப்பட்ட வாகனத்தை கடத்திச் சென்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதுடன், ஏ வகை போதைப்பொருளை வைத்திருந்ததற்காக அவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இருவரும் தொடர்ந்தும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

The post பொலிஸார் துரத்தல்: விபத்தில் ஒருவர் பலி; ஆறு பேர் காயம் appeared first on Vanakkam London.

By admin