0
சிறை மீள் அழைப்பில் தேடப்பட்டு வந்த ஒரு நபர், பொலிஸ் அதிகாரிகள் மீது காரை செலுத்தியதைத் தொடர்ந்து, கொலை முயற்சி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹாம்ப்ஷையர் மற்றும் ஐல் ஆஃப் வைட் (Hampshire and Isle of Wight) பொலிஸார் தெரிவித்தனர்.
விளக்குகள் ஏதும் ஒளிரவிடப்படாமல் ஓட்டப்பட்ட அந்த கார், சவுத்தாம்ப்டனின் ஃப்ரீமாண்டில் (Southampton, Freemantle) பகுதியில் உள்ள பேய்ன்ஸ் வீதியில் (Paynes Road), நள்ளிரவு 00:30 (GMT) மணியளவில் பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது, இரண்டு பொலிஸ் வாகனங்களில் மோதியுள்ளது.
“தப்பிச் செல்லும் முயற்சியின் போது அந்த வாகனம் பொலிஸ் அதிகாரிகள் மீது செலுத்தப்பட்டது. அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் எந்த அதிகாரிக்கும் காயம் ஏற்படவில்லை,” என பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் 45 வயதுடையவர் என்றும், சவுத்தாம்ப்டனைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. கொலை முயற்சி, ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர் தற்போது பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
காணாமல் போன நபர் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக அந்த பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது இந்த நபர் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் ஒரு பொலிஸ் வாகனத்தின் முன்பகுதி சேதமடைந்ததாகவும், மற்றொரு வாகனத்தின் பின்பகுதி சேதமடைந்ததாகவும் ஹாம்ப்ஷையர் பொலிஸ் தெரிவித்துள்ளது. விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.