• Sun. Jan 12th, 2025

24×7 Live News

Apdin News

பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக முதல்வர் கூறியதே உண்மை: பேரவை தலைவர் அப்பாவு அறிவிப்பு | cm said regarding Pollachi incident is true speaker Appavu

Byadmin

Jan 12, 2025


சென்னை: பொள்​ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்​டா​லின் கூறியதே உண்மை என்று பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்தார்.

சட்டப்​பேர​வை​யில் அண்ணா பல்கலைக்​கழகம் விவகாரம் மற்றும் அதிமுக ஆட்சி​யில் நடந்த பொள்​ளாச்சி சம்பவம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்​கட்​சித் தலைவர் பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

அப்போது பழனிசாமி, ‘‘பொள்​ளாச்சி பாலியல் சம்பவம் 2019-ம் ஆண்டு பிப்​.12-ம் தேதி நடந்​தது. பாதிக்​கப்​பட்ட பெண் 24-ம் தேதி பொள்​ளாச்சி கிழக்கு காவல் நிலை​யத்​தில் புகார் அளிக்​கிறார். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்​யப்​பட்டு, அடுத்த நாளே முக்கிய குற்​றவாளிகள் 3 பேர் கைது செய்​யப்​பட்​டனர். தலைமறைவான மற்றொரு குற்​றவாளி 2019-ம் ஆண்டு மார்ச் 5-ம் தேதி கைது செய்​யப்​பட்​டுள்​ளார். இதுதான் உண்மை’’ என்றார்.

இதற்கு மு.க.ஸ்​டா​லின், ‘‘பொள்​ளாச்சி பாலியல் சம்பவத்​தில் புகார் கொடுத்த உடனே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்​யப்​பட​வில்லை. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்​யப்​பட்டு, 12 நாட்கள் கழித்து​தான் கைது செய்​யப்​பட்​டுள்​ளது.

புகார் கொடுக்க 2 ஆண்டுகள் ஆகியுள்​ளது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்​வதற்கு 12 நாட்கள் ஆகியுள்​ளது. 24 மணி நேரத்​தில் குற்றவாளிகள் கைது செய்​யப்​பட​வில்லை. இதுதான் உண்மை. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்​டும் என்றால் ஜன.11-ம் தேதி (நேற்று) ஆதாரத்தை பேரவைத் தலைவரிடம் கொடுக்​கிறேன்.

முதல்வர் சவால்: எதிர்க்​கட்சி தலைவரும் ஆதாரத்தை கொடுக்​கட்டும். பேரவை தலைவர் முடிவு எடுக்​கட்டும். நான் சொல்வதை நிரூபிக்கவில்லை என்றால் நீங்கள் சொல்​லும் தண்டனையை ஏற்று கொள்​கிறேன். நீங்கள் சொன்னதை நிரூபிக்க​வில்லை என்றால் நான் சொல்லும் தண்டனையை ஏற்று கொள்ள தயாரா?’’ என்றார்.

அதனை எதிர்க்​கட்சி தலைவர் பழனிசாமி ஏற்றுக்கொண்​டார். பேரவைத் தலைவரும், ‘‘ஜனவரி 11-ம் தேதி இருவரும், ஆதாரத்தை என்னிடம் தரலாம்’’ என்றார்.

நேற்று காலை திமுக, அதிமுக சார்​பில் ஆதாரங்கள் பேரவை தலைவரிடம் சமர்ப்​பிக்​கப்​பட்டன. பேரவை தொடங்கி நடைபெற்று வந்த நிலை​யில், நீர்​வளத்​துறை அமைச்சர் துரை​முரு​கன், ‘‘ஜன. 10-ம் தேதி இந்த அவையில் நீண்​ட நேரம் முதல்​வர், எதிர்க்​கட்சி தலைவர் இடையே விவாதம் நடைபெற்​றது. பொள்​ளாச்​சி​யில் நடந்த நிகழ்​வில் யார் சொல்வது நியாயம் என்பதை இருவரும் ஏற்றுக் கொண்​டபிறகு, அதனை பேரவை தலைவரிடம் ஒப்படைப்பது என்றும், பிறகு அதனை பார்த்து தீர்ப்பு வழங்​கு​வ​தாக​வும் சொன்னீர்​கள். இந்த அவையில் அத்தனை உறுப்​பினர்கள் மத்தி​யில் நீங்கள் அளித்த வாக்​குறு​திக்கு ஏற்ப, தங்களுடைய தீர்ப்பு என்ன என்பதை இந்த அவை அறிய விரும்​பு​கிறது’’ என்றார்.

அதைத்​தொடர்ந்து பேரவை தலைவர் அப்பாவு பேசி​ய​தாவது: பொள்​ளாச்சி பாலியல் வழக்​கில் தங்களிடம் இருந்த ஆவணங்களை முதல்வர் கொடுத்​தார். அதேபோல், எதிர்க்​கட்சி சார்​பிலும் வழங்​கப்​பட்​டது. இரண்​டை​யும் ஆய்வு செய்​த​தில் முதல்வர் சொன்ன தகவல்கள் அப்படியே இருந்தன. சம்பவம் 12-ம் தேதி நடந்​தது. முதல் தகவல் அறிக்கை 24-ம் தேதி பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. எதிர்க்​கட்சி கொடுத்த ஆவணத்தை சரி பார்த்​த​தில் 12-ம் தேதி சம்பவம் நடந்​தது. 16-ம் தேதி பாதிக்​கப்​பட்ட பெண்​ணின் தாயார் செயின் எங்கே என்று கேட்​ட​தில் இருந்து, அதிலிருந்து சம்பவம் வெளியே வருகிறது.

தொடர்ந்து, 19-ம் தேதி பாதிக்கப்​பட்ட பெண்​ணின் சகோதரர், மாவட்ட காவல்​துறை கண்காணிப்​பாளரிடம் புகார் மனு கொடுக்​கிறார். துணை காவல் கண்காணிப்​பாளரை சென்று பார்க்​கு​மாறு சொல்​கின்​றனர். அவரால் 22-ம் தேதி​தான் பார்க்க முடிகிறது. அங்கு பொள்​ளாச்சி கிழக்கு காவல் நிலை​யத்​துக்கு செல்​லு​மாறு சொல்​லி​யுள்​ளனர். 24-ம் தேதி பா​திக்​கப்​பட்ட பெண்​ணிடம் கையெழுத்து வாங்கி ​முதல் தகவல் அறிக்கை பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. அது​தான் உண்மை. இ​தில் வேறு ஒன்​றும் இல்லை. நடந்​தவை​யும் இவ்​வளவு​தான். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்​.



By admin