• Wed. May 14th, 2025

24×7 Live News

Apdin News

பொள்ளாச்சி வழக்கு: சிபிஐ ஒரே ஒரு ஐபோன் மூலம் துப்பு துலக்கியது எப்படி? முழு விவரம்

Byadmin

May 14, 2025


பொள்ளாச்சி பாலியல் வழக்கு

பட மூலாதாரம், SPECIAL ARRANGEMENT

படக்குறிப்பு, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

  • எழுதியவர், சேவியர் செல்வகுமார்
  • பதவி, பிபிசி தமிழ்

2019-ஆம் ஆண்டில் பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக கசிந்த வீடியோக்கள் தமிழ்நாட்டையே உலுக்கின. சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்ட இந்த வழக்கில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வெளியாகியுள்ளது. 9 பேரை குற்றவாளிகள் என்று அறிவித்து, அவர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்களை மிரட்ட உதவிய வீடியோக்கள்தான் இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக மாறி, குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தர காரணமாக இருந்ததாகச் சொல்கிறார் சிபிஐ தரப்பு வழக்கறிஞர் சுரேந்திரமோகன். சிபிஐ திரட்டிய ஆதாரங்களை வைத்து வாதாடி குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை கிடைக்க முக்கியக் காரணமாக இருந்தவர் சுரேந்திரமோகன்.

இவ்வழக்கில் சிபிஐக்கு மிகவும் உறுதுணையாக தமிழக காவல்துறையின் பெண் அதிகாரிகள் சிலர் இருந்துள்ளனர். காவல் ஆய்வாளர் பச்சையம்மாள் தலைமையில் சிறப்பு எஸ்ஐ உட்பட 7 பேர் கொண்ட அணி, இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து, ஆதாரங்களைத் திரட்டி, குற்றங்களை நிரூபிப்பதற்கு பேருதவியாக இருந்ததாகத் தெரிவிக்கிறார் சிபிஐ வழக்கறிஞர் சுரேந்திரமோகன்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு
படக்குறிப்பு, சிபிஐ வழக்கறிஞர் சுரேந்திரமோகன்.

சிபிஐ சந்தித்த சவால்களும், வழக்கில் உதவிய வீடியோவும்!

முதலில் தமிழக காவல்துறையால் வழக்கு பதியப்பட்டு, அதன்பின் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்ட, 2 மாதங்களுக்குப் பின் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. அதற்குள் பாலியல் துன்புறுத்தல் வீடியோ ஆதாரங்கள் பெரும்பாலும் அழிக்கப்பட்டு விட்டதாகவும், அவற்றை மீட்டெடுத்ததால்தான் வழக்கில் வெற்றி பெற முடிந்ததாகவும் சிபிஐ தரப்பு கூறுகிறது.

By admin