• Sun. Aug 3rd, 2025

24×7 Live News

Apdin News

போகி | திரைவிமர்சனம்

Byadmin

Aug 2, 2025


போகி – திரைப்பட விமர்சனம்

தயாரிப்பு : வி சினிமா குளோபல் நெட்வொர்க் & லைக்

நடிகர்கள் : நபி நந்தி, சரத், பூனம் கவுர், எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி, எம். எஸ். பாஸ்கர், சங்கிலி முருகன், மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர்.

இயக்கம் : எஸ். விஜயசேகரன்

மதிப்பீடு : 1.5/5

2008 ஆம் ஆண்டில் இயக்குநர் மஜீத் இயக்கத்தில் வெளியான ‘ கி.மு.‌ ‘ எனும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ஹசன்-

தனது பெயரை நபி நந்தி என மாற்றி வைத்துக் கொண்டு கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் படம் ‘போகி’. பட வெளியீட்டிற்கு முன்பு விளம்பரப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபடாத இந்த படக்குழுவினர் படத்தை பட மாளிகையில் வெளியிட்டுள்ளனர். உண்மை சம்பவங்களை தழுவி உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களின் வரவேற்புக்கு உரியதா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

பெண்களை அவர்கள் மரணமடைந்த பிறகும் நிர்வாணமாக புகைப்படம் எடுத்து, அதனை இணையதள உலகிற்கு ஒரு கும்பல் விற்பனை செய்கிறது. மருத்துவ வசதி இல்லாத மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்து மருத்துவம் படிப்பதற்காக கதையின் நாயகி ( சுவாசிகா) மாநகரத்திற்கு வருகை தருகிறார்.

அந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிணவறையில் மரணம் அடைந்த பெண்களை ஆபாசமாக புகைப்படம் எடுக்கும் கும்பலை பற்றி அறிந்து கொள்கிறார்.

அதன் பின் அதனை ஆதாரத்துடன் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திற்கு புகார் அளிக்கிறார். இதன் காரணமாக கதையின் நாயகி கொலை செய்யப்படுகிறார். இதனால் வைத்தியராக வருகை தந்து மருத்துவ சேவையை செய்வார் என எதிர்பார்க்கும் மலைவாழ் மக்களின் எதிர்பார்ப்பு நிராசையாகிறது.

இதனால் வெகுண்ட ‌ அந்த பெண்ணின் சகோதரரும் ( நபி நந்தி) , அந்த பெண்ணை காதலித்து திருமண செய்ய விரும்பும் இளைஞரும் ( சரத்) இணைந்து இந்த கும்பலை கண்டறிந்து அழிக்க திட்டமிடுகிறார்கள். இவர்களின் திட்டம் அரங்கேறியதா? இல்லையா? என்பதை விவரிப்பது தான் இப்படத்தின் கதை.

கதையின் நாயகியாக கதையை வழிநடத்தி செல்லும் கதாபாத்திரத்தில் ‘ லப்பர் பந்து’, ‘மாமன்’ பட புகழ் நடிகை சுவாசிகா (இளமையாக இருந்த காலகட்டத்தில்) நடித்திருக்கிறார். நடிப்பில் குறை சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்களின் உளவியல் மற்றும் உடலியல் சார்ந்த துன்பங்களை தனது நடிப்பில் அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் நபி நந்தி மற்றும் சரத் இயக்குநர் சொன்னதை செய்திருக்கிறார்கள். வில்லனாக நடித்திருக்கும் மொட்டை ராஜேந்திரன் வழக்கம்போல் சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தில் தோன்றும் நடிகர்கள் சங்கிலி முருகன், எம். எஸ். பாஸ்கர் ஆகியோர் இயக்குநர் சொன்னதை மட்டும் செய்திருக்கிறார்கள்.

இயக்குநர் நிறைய விடயங்களை ஒரே படைப்பில் சொல்லி விட வேண்டும் என்ற துடிப்பின் காரணமாக எதை முதலில் சொல்வது ?எந்த வரிசையில் சொல்வது? என தெரியாமல் குழம்பி இருக்கிறார். இதனால் பார்வையாளர்களையும் குழப்பி இருக்கிறார்.

ஒளிப்பதிவு – பாடல்கள்- பின்னணி இசை – படத்தொகுப்பு – கலை இயக்கம் – என அனைத்தும் சிறிய முதலீட்டு திரைப்படங்களுக்கான குறைந்தபட்ச தரத்தில் இருக்கிறது.

போகி- ஊசி போன பிரியாணி.

 

 

The post போகி | திரைவிமர்சனம் appeared first on Vanakkam London.

By admin