• Wed. Apr 16th, 2025

24×7 Live News

Apdin News

போக்குவரத்து கழகங்கள் ரூ.13 கோடி நிலுவை: ஊழியர்களுக்கு கடன் வழங்க கூட்டுறவு சங்கம் மறுப்பு | Transport corporations have a balance of Rs 13 crore

Byadmin

Apr 15, 2025


சென்னை: போக்​கு​வரத்​துக் கழகங்​கள் ரூ.13 கோடி நிலுவை வைத்​துள்​ள​தால் ஊழியர்​களுக்கு கடன் வழங்க கூட்​டுறவு சங்​கம் மறுப்பு தெரி​வித்​துள்​ளது.

போக்​கு​வரத்​துக் கழக பணி​யாளர்​கள் கூட்​டுறவு சிக்கன சேமிப்பு மற்​றும் கடன் சங்​கத்​தில் சென்னை மாநகர போக்​கு​வரத்​துக் கழகம், விழுப்​புரம் போக்​கு​வரத்​துக் கழகம், அரசு விரைவு போக்​கு​வரத்து கழகம் உள்​ளிட்ட கழகங்​களைச் சார்ந்த பணி​யாளர்​கள் உறுப்​பினர்​களாக உள்​ளனர். போக்​கு​வரத்து பணி​யாளர்​களின் சேமிப்பை ஊக்​கு​வித்​தல், கடன் வழங்​குதல் உள்​ளிட்ட பணி​களை கூட்​டுறவு சங்​கம் மேற்​கொண்டு வரு​கிறது. அந்த வகை​யில் மாதம்​தோறும் கடன் மனுக்​கள் பெறப்​பட்​டு, கடன் தொகை வழங்​கு​வது வழக்​கம்.

இதையொட்​டி, சங்​கத்​தின் செயலர் (பொறுப்​பு) கு.உ​மாசந்​திரன் வெளி​யிட்ட அறி​விப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: ஏப்​ரல் மாதத்​தில் எம்​டிசி, எஸ்​இடிசி கழகங்​களைச் சேர்ந்த உறுப்​பினர்​களிடம் இருந்து மட்​டும் கடன் மனுக்​கள் பெறப்​படும். விழுப்​புரம் போக்​கு​வரத்​துக் கழகம், திரு​வண்​ணா​மலை, வேலூர், காஞ்​சிபுரம் ஆகிய மண்​டலங்​களைச் சேர்ந்த உறுப்​பினர்​களிடம் கடந்த செப்​டம்​பர் மாதம் முதல் பிடித்​தம் செய்த ரூ.13 கோடி அளவு தொகையை சம்​பந்​தப்​பட்ட கழகங்​கள் கூட்​டுறவு சங்​கத்​துக்கு செலுத்​த​வில்​லை. எனவே, சம்​பந்​தப்​பட்ட மண்​டலங்​களைச் சேர்ந்த உறுப்​பினர்​களுக்கு கடன் வழங்​கு​வது, கணக்கு முடிப்​பது ஆகிய கூட்​டுறவு கடன் சங்க நடவடிக்​கைகள்,நிலு​வைத் தொகை கிடைக்​கும் வரை தற்​காலிக​மாக நிறுத்தி வைக்​கப்​படு​கிறது.

நிலு​வைத் தொகை கிடைக்​கப் பெற்​றதும் கடன் மனுக்​கள் பெறப்​படும்.மேலும், நிலு​வைத் தொகை பெறு​வது குறித்து கூட்​டுறவு கடன் சங்​கம் சட்​டப்​பூர்வ நடவடிக்​கை​யும் தொடர்ந்​துள்​ளது.இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.



By admin