• Fri. Jan 9th, 2026

24×7 Live News

Apdin News

போதைப்பொருளுக்கு அடிமையான தந்தை 14 வயது மகளை அடித்து சித்திரவதை! | காரணம் இதுதான்…

Byadmin

Jan 8, 2026


போதைப்பொருள் வாங்குவதற்கு பணம் தேவை என்பதற்காக 14 வயது சிறுமியான தன் மகளின் கையில் இருந்த தங்க வளையலை கழற்றித் தருமாறு தந்தை அடித்துத் தாக்கியதில் சிறுமி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாள்.

அதேவேளை மகளைத் தாக்கிய பொலிஸார் தந்தையை கைது செய்து, பின்னர் எச்சரித்து விடுவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் திங்கட்கிழமை (5) காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மாவிலங்குதுறை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போதைப்பொருள் வாங்குவதற்கு வேண்டிய பணத்தைத் திரட்ட, மகளின் கையில் இருந்த 3 பவுண் நிறை கொண்ட தங்க வளையலை கழற்றித் தருமாறு சிறுமியின் தந்தை கேட்டுள்ளார்.

மகள் தான் அணிந்திருந்த வளையலை கழற்றி தந்தையிடம் கொடுத்த பின்னர், அவர் மகளை  அடித்து தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் காயமடைந்த சிறுமி அனுமதிக்கப்பட்டதையடுத்து, பொலிஸாரிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டது.

அதன் பின்னர், விசாரிப்பதற்காக சென்ற பொலிஸாரிடம் குறித்த நபர் வாக்குவாதத்தில் ஈடுபட, அவரை பொலிஸார் கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமி தந்தைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொலிஸாரிடம் கோரியதையடுத்து கைது செய்யப்பட்ட நபரை பொலிஸார் எச்சரித்து விடுவித்தனர்.

By admin