• Mon. Apr 21st, 2025

24×7 Live News

Apdin News

போதைப் பொருள் வழக்கு: ஜாபர் சாதிக், அவரது சகோதரருக்கு ஐகோர்ட் ஜாமீன் | Jaffar Sathik, brother Salim granted bail

Byadmin

Apr 21, 2025


சென்னை: போதைப் பொருள் கடத்தலில், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கைது செய்யபட்ட ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீமுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து, கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் 26-ம் தேதி கைது செய்தது. பின்னர் அவரது சகோதரர் முகமது சலீமும் ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத் துறை தரப்பில், ஜாபர் சாதிக் திமுகவின் நிர்வாகியாக இருந்ததால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதால் இருவருக்கும் ஜாமீன் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், மணிஷ் சிஷோடியா தீர்ப்பை முன் உதராணமாக வைத்து ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீமுக்கு ஜாமீன் வழங்குவதாக நீதிபதி தெரிவித்தார்.



By admin