• Mon. Apr 28th, 2025

24×7 Live News

Apdin News

போப் ஜோன்: ஆணாக வேடமிட்டு போப்பான பெண் – வரலாற்று உண்மை என்ன?

Byadmin

Apr 27, 2025


போப் ஜோன்: ஆண் போல வேடமிட்டு போப் ஆண்டவர் ஆன பெண் குறித்த வரலாறு உண்மையா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 15ஆம் நூற்றாண்டின் மினியேச்சர் விளக்கப்படத்தில் போப்பஸ் ஜோனா

இடைக்கால ஐரோப்பாவில், 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உயர்கல்வி பயின்ற பெண்ணைப் பற்றி ஒரு கதை பரவத் தொடங்கியது. பல்கலைக்கழகக் கல்வி பயில்வதற்காக அவர் ஆண் போல் உடையணிந்து ரோம் நகருக்குப் பயணித்தார். அங்கு அவர் திருச்சபையின் தரவரிசையில் உயர்ந்து பின்னர் 855 மற்றும் 857க்கு இடைப்பட்ட காலத்தில் போப்பாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

ஊர்வலத்தின்போது தெருவில் குழந்தையைப் பிரசவித்த பிறகு, அவர் ஒரு பெண் என்பது கண்டுபிடிக்கப்பட்டு அவரது போப் பதவி வியத்தகு முறையில் முடிவுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. அவர் கொலை செய்யப்பட்டோ அல்லது இயற்கையான காரணத்தாலோ இறந்ததாக இருவேறு விதமாகச் சொல்லப்படுகிறது.

இடைக்கால நூல்களில், அயோனன்ஸ் ஆங்கிலிகஸ் அல்லது ஜான் தி இங்கிலிஷ்மேன் என்று அறியப்படும் போப் ஜோனின் கதை, பல நூற்றாண்டுகளாகக் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு பெரும்பாலான அறிஞர்களால் நிராகரிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அது தொடர்ந்து சொல்லப்படுகிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

பெண்களை பழமையான பொறுப்புகளிலேயே வைத்திருக்க கத்தோலிக்க திருச்சபையால் அவரது கதை ஓர் எச்சரிக்கையாகப் பயன்படுத்தப்பட்டது. சீர்திருத்தத்திற்குப் பிறகு, கத்தோலிக்க மதத்தின் நியாயத்தன்மையையும் ரோமின் அதிகாரத்தையும் குறைமதிப்பிற்கு உட்படுத்த புராட்டஸ்டன்டுகள் இந்தக் கதையைப் பயன்படுத்தினர்.

By admin