• Mon. Apr 21st, 2025

24×7 Live News

Apdin News

போப் பிரான்சிஸ் 88-வது வயதில் காலமானார் – வாடிகன் உறுதி செய்தது

Byadmin

Apr 21, 2025


போப் பிரான்சிஸ் காலமானார்

பட மூலாதாரம், Reuters

போப் பிரான்சிஸ் திங்கட்கிழமை வாடிகனில் உள்ள இல்லத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 88.

அவரது காலமானதை வாடிகன் உறுதிப்படுத்தியுள்ளது.

போப் பெனடிக்ட் XVI பதவி விலகிய பின்னர், மார்ச் 2013-ஆம் தேதி கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்த கார்டினல் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ எனும் இயற்பெயரைக் கொண்ட இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

“அவரது முழு வாழ்க்கையும் கர்த்தருக்கும் அவருடைய திருச்சபைக்கும் சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டது” என்று கார்டினல் ஃபாரெல் கூறுகிறார்.

By admin