• Sat. Apr 4th, 2026

24×7 Live News

Apdin News

போரின் நடுவே இரானில் அமெரிக்க விமானப்படை வீரரை தேடும் பணி எவ்வளவு கடினமாக இருக்கும்?

Byadmin

Apr 4, 2026


இரான், அமெரிக்க எஃப்-15 போர் விமானம், சிஎஸ்ஏஆர் வீரர்கள், போர்சார் தேடுதல் மற்றும் மீட்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எதிரிப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து வீழ்த்தப்பட்ட விமானங்களின் வீரர்களை மீட்பதற்காக, அமெரிக்க விமானப்படையின் பாராரெஸ்க்யூ பிரிவுகள் சிறப்பு பயிற்சி பெறுகின்றன.

இரான் வான்வெளியில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க எஃப்-15 (F-15) போர் விமானத்தின் விமானி மீட்கப்பட்டதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இது உறுதிப்படுத்தப்பட்டால், பல தசாப்தங்களாகத் தொடரும் அமெரிக்காவின் போர்க்கால தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் இதுவே மிகவும் சமீபத்தியதாக இருக்கும்.

பிபிசியின் அமெரிக்க கூட்டு செய்தி முகமையான சிபிஎஸ் (CBS) நியூஸ் தகவல்படி, விமானத்தில் இருந்த இரண்டாவது நபரைத் தேடும் பணி இரானின் உட்பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

போர்க்கால தேடுதல் மற்றும் மீட்பு (Combat Search and Rescue – CSAR) பணிகள், அமெரிக்க மற்றும் நட்பு நாட்டு ராணுவங்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ளும் பணிகளிலேயே மிகவும் சிக்கலான மற்றும் நேரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் பணிகளாகக் கருதப்படுகின்றன.

அமெரிக்காவில், விமானப்படையின் எலிட் (Elite) பிரிவுகள் சிஎஸ்ஏஆர் (CSAR) நடவடிக்கைகளுக்காக பிரத்யேகமாகப் பயிற்சி பெற்றுள்ளன. விமானங்கள் இழக்கப்படக்கூடிய வாய்ப்புள்ள போர் பகுதிகளுக்கு அருகில் அவர்கள் முன்கூட்டியே பணியமர்த்தப்படுகிறார்கள்.

போர்க்கால தேடுதல் மற்றும் மீட்பு என்றால் என்ன?

சுருக்கமாகச் சொன்னால், சிஎஸ்ஏஆர் பணிகள் என்பது சுட்டு வீழ்த்தப்பட்ட விமானங்களின் விமானிகள் மற்றும் தனித்துவிடப்பட்ட துருப்புகள் உள்ளிட்ட உதவி தேவைப்படும் நபர்களைக் கண்டறிவதற்கும், அவர்களுக்கு உதவுவதற்கும் மற்றும் அவர்களை மீட்பதற்கும் மேற்கொள்ளப்படும் ராணுவ நடவடிக்கைகள் ஆகும்.

By admin