• Sat. Apr 4th, 2026

24×7 Live News

Apdin News

போர் சூழலில் இரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களின் நிலை என்ன?

Byadmin

Apr 4, 2026


இரானில் பசியுடன் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்கள் - மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

பட மூலாதாரம், HANDOUT

“குண்டுச் சத்தம் கேட்கும்போதெல்லாம் காக்கை, குருவி போல ஓடி ஒளிந்துகொள்கிறோம்” – இரானில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மீனவர் ரவி சொன்ன வார்த்தைகள் இவை.

இரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல் தொடங்கி ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும் நிலையில் மீன்பிடித் தொழிலுக்காக இரான் சென்ற தமிழக மீனவர்கள் இன்னும் நாடு திரும்பவில்லை.

ஆனால் “அதற்குறிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்” என்கிறது அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம்.

ஒரு மாதமாக சிக்கியுள்ள மீனவர்கள்

“போரைக் காட்டிலும் பசியின் கொடுமை எங்களைக் கொன்றுவிடும்” என்று மீனவர்கள் வெளியிட்ட வீடியோ அவர்கள் இருக்கும் ஆபத்தான சூழலை உணர்த்தியது.

ஹோர்மூஸ் நீரிணைக்கு அருகில் உள்ள இரானின் கிஷ் தீவு பகுதியில் இருந்து கன்னியாகுமரியை சேர்ந்த தாடியோஸ் பேசிய அந்தப் பதிவில் “கையிருப்பில் உள்ள உணவை வைத்து ஒரு நாளைக்கு ஒருவேளை மட்டுமே உண்ண முடிகிறது. அவை தீர்ந்துவிட்டால் பசியின் கொடுமையால் இறக்க நேரிடும்” என்றார்.

By admin