• Tue. Mar 10th, 2026

24×7 Live News

Apdin News

போர் சூழலில் மத்திய கிழக்கு – இரான், சௌதி, துபையில் வசிக்கும் இலங்கை மக்கள் கண்டது என்ன?

Byadmin

Mar 10, 2026


"எங்கள் தலைக்கு மேலே ஏவுகணைகள் சீறுகின்றன": மத்திய கிழக்கு போர்முனையில் தவிக்கும் இலங்கையர்களின் நேரடி சாட்சியங்கள்

பட மூலாதாரம், U.S. Navy via Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், அங்கு வாழ்வாதாரத்திற்காகச் சென்றுள்ள பல்லாயிரக்கணக்கான இலங்கையர்களின் பாதுகாப்பை பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

அரசாங்கம் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வருவதாகக் குறிப்பிட்டாலும், போர் இடம்பெறும் நாடுகளில் உள்ள இலங்கையர்கள் துயரத்தையும் தினசரி மரண அச்சத்தையும் எதிர்கொண்டு வருகின்றனர்.

‘நான் பார்த்த தெஹ்ரான் இதுவல்ல’

இரானின் தலைநகர் தெஹ்ரானில் வாகனச் சாரதியாகப் பணியாற்றும் இலங்கைத் தொழிலாளர் ஒருவர் (பாதுகாப்பு கருதி பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது), அங்குள்ள தற்போதைய கோரமான சூழலை பிபிசி தமிழுக்கு விவரித்தார்.

“நாங்கள் இவ்வளவு காலம் பார்த்த தெஹ்ரான் இப்போது இல்லை. எங்கு பார்த்தாலும் குண்டுத் தாக்குதல்களின் அழிவுகளையே காண முடிகிறது. குடியிருப்பு வீடுகள், வர்த்தக நிலையங்கள் என அனைத்துமே ஏவுகணைத் தாக்குதலில் சிதைந்து போயுள்ளன,” என அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதை உணர முடிகிறது. இவ்வாறான அழிவுகளில் நாம் என்ன செய்யப்போகின்றோம் என்பதே தெரியவில்லை. இறைவன் எம்மோடு இருப்பான் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்.”

By admin