• Thu. Apr 9th, 2026

24×7 Live News

Apdin News

போர் நிறுத்தத்தில் பாகிஸ்தான் பங்கு குறித்து எழும் கேள்வி – இஸ்ரேலுக்கு பல விஷயங்கள் தெரியாதா?

Byadmin

Apr 9, 2026


பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரானுடனான போர் நிறுத்தத்தில் பாகிஸ்தான் ஃபீல்டு மார்ஷல் ஆசிம் முனீரின் பெயர் முக்கியமாகப் பேசப்படுகிறது (கோப்புப் புகைப்படம்)

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் பாகிஸ்தானின் “மத்தியஸ்தர்” பங்கு குறித்து, இந்தியாவில் உள்ள இஸ்ரேலிய தூதர் ரூவன் அசார் வியாழக்கிழமை சந்தேகம் எழுப்பியுள்ளார்.

பாகிஸ்தானை ஒரு நம்பிக்கைக்குரிய நாடாக இஸ்ரேல் பார்க்கவில்லை என்று ரூவன் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இரானும், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளும் [இஸ்ரேல்] போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக அறிவித்தபோது, லெபனான் மீதும் எந்தத் தாக்குதலும் நடத்தப்படாது என்று கூறியிருந்தார்.

ஆனால் இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம், லெபனான் மீதான ராணுவ நடவடிக்கை தொடரும் என்று கூறுகிறது.

இந்த போர் நிறுத்தத்தில் லெபனான் விவகாரம் தொடர்பாக இஸ்ரேலுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் முதல் நாளிலேயே வெளிப்படையாகத் தெரிந்தன.

By admin