• Fri. Aug 22nd, 2025

24×7 Live News

Apdin News

போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியிலும் உக்ரேன் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்திய ரஷ்யா!

Byadmin

Aug 22, 2025


உக்ரேன்- ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி உட்பட உலக தலைவர்கள் பலரும் முயற்சித்து வருகின்றனர.

இந்நிலையில், உக்ரேனின் மேற்குப் பகுதியில் ரஷ்யா மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலால் உக்ரேனில் உள்ள அமெரிக்க மின்னியல் ஆலையும் தாக்கப்பட்டது.

போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளுக்கு இடையே ரஷ்யா ஆளில்லா ஹெலிகாப்டர் மூலம் தாக்குதலை மேற்கொண்டிருக்கிறது.

இந்த வார ஆரம்பத்தில், உக்ரேன்-ரஷ்யப் போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தை வெள்ளை மாளிகையில் நடைபெற்றது.

இதுவரை முன்மொழியப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தங்களில் இடம்பெற்றிருந்த முக்கிய நிபந்தனைகளை ரஷ்யா நிராகரித்திருப்பதால் போர் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

அதனைத் தொடர்ந்து ரஷ்யா சுமார் 1,000 நெடுந்தொலைவு ஏவுகணைகளையும் ஆளில்லா ஹெலிகாப்டர்களையும் உக்ரேன் மீது பயன்படுத்தியிருக்கிறது.

அமைதியான முறையில் போர் றுத்தத்தை அடைய மாஸ்கோ எவ்வித அறிகுறிகளையும் காட்டவில்லை என்று உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.

By admin