0
போலந்துக்குள் ரஷ்யாவின் ஹெலிகாப்டர் நுழைந்த பிறகு நேட்டோ நாடுகள் தற்காப்பை வலுப்படுத்துவதாகக் கூறியிருக்கிறது.
நெதர்லந்தும் செக் குடியரசும் தற்காப்புக்கு உதவுவதாகக் கூறின.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் 3 போர் விமானங்களை அனுப்பி, போலந்து வான்வெளியைக் காக்கப் போவதாக உத்தரவாதம் தந்தார்,
அத்துடன், இங்கிலாந்தும் பிரான்ஸும் நேட்டோவின் கிழக்குப் பகுதிக்குப் போர் விமானங்களை அனுப்புவது பற்றியும் யோசிக்கின்றன.
அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப்பும் மேற்படி போலந்துக்குள் நுழைந்த ரஷ்ய ஹெலிகாப்டர் நுழைந்தமைக்கு கசப்பை வெளியிட்டார். ஆனால் அதைப் பெரிதுபடுத்த அவர் விரும்பவில்லை.
முன்னதாக, ரஷ்யாவின் சுமார் 20 ஹெலிகாப்டர்களைச் சுட்டு வீழ்த்தியதாக போலந்து கூறியது.
எனினும், போலந்தைத் தாக்கவில்லை என ரஷ்யா கூறியது.