• Mon. Aug 4th, 2025

24×7 Live News

Apdin News

போலி திருமணங்கள்: இந்தியாவில் இளைஞர்களை கவரும் புதிய டிரெண்ட் – மும்பை, பெங்களூருவில் என்ன நடக்கிறது?

Byadmin

Aug 4, 2025


போலியான  திருமண நிகழ்வுகள்

பட மூலாதாரம், Third Place

படக்குறிப்பு, உண்மையான திருமணத்தைப் போலவே அலங்கரிக்கப்பட்ட இரவு விருந்து அல்லது போலியான திருமண நிகழ்வுகள் , இந்திய இளைஞர்களிடையே வேகமாக பிரபலமடைந்து வருகின்றன.

பெரியளவில் நடத்தப்படும் இந்திய திருமணங்களைப் பற்றி நினைக்கும் போது, என்னவெல்லாம் உங்கள் நினைவுக்கு வரும்?

பிரகாசமான விளக்குகள், பளபளப்பான ஆடைகள், பாலிவுட் பாடல்கள், பலவகை உணவுகள் மற்றும் கொண்டாட்டம் நிறைந்த சூழல்.

இவை அனைத்தும் உணர்ச்சிகரமாகவும், பிரமாண்டமாகவும் இருக்கும் அல்லவா?

ஆனால், மணமகனும் மணமகளும் இல்லாமல் இதையெல்லாம் கற்பனை செய்யுங்கள்.

By admin