• Tue. Sep 23rd, 2025

24×7 Live News

Apdin News

போலி நாணயத்தாளுடன் இளைஞன் கைது!

Byadmin

Sep 23, 2025


அநுராதபுரம் – ஹபரணை பிரதேசத்தில் ஆயிரம் ரூபா போலி நாணயத்தாளுடன் இளைஞன் ஒருவர் ஹபரணை பொலிஸாரால் இன்று திங்கட்கிழமை (22) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஹபரணை பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் இளைஞன் ஒருவர்  போலி நாணயத்தாள் ஒன்றை மாற்ற முயன்றதாக ஹபரணை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சந்தேக நபரான இளைஞனை கைதுசெய்துள்ளனர்.  கைதுசெய்யப்பட்ட இளைஞன் தம்புள்ளை பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடையவர் ஆவார்.

இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட இளைஞன் நாளை செவ்வாய்க்கிழமை (23) கெக்கிராவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

The post போலி நாணயத்தாளுடன் இளைஞன் கைது! appeared first on Vanakkam London.

By admin