• Wed. Oct 2nd, 2024

24×7 Live News

Apdin News

போலி நீதிமன்றம், போலி சிபிஐ அதிகாரிகள்: பிரபல ஜவுளி தொழிலதிபர் எஸ்.பி.ஓஸ்வாலிடம் 7 கோடி ஏமாற்றப்பட்டது எப்படி?

Byadmin

Oct 2, 2024


`தானா சேர்ந்தக் கூட்டம்’ பட பாணியில் ஏமாற்றப்பட்ட வர்தமான் குழுமத் தலைவர் எஸ்.பி.ஓஸ்வால்; நூதன மோசடி நடந்தது எப்படி?

பட மூலாதாரம், Vardhman Official Website

படக்குறிப்பு, எஸ்.பி.ஓஸ்வால்

பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த 82 வயதான பத்மபூஷன் விருது பெற்ற ஜவுளி தொழிலதிபர் எஸ்.பி.ஓஸ்வால் மிகப்பெரிய இணைய மோசடியில் ஏமாற்றப்பட்டிருக்கிறார். ஓஸ்வாலிடம் திரைப்பட பாணியில் 7 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர்.

போலியான இணையவழி உச்ச நீதிமன்ற விசாரணைகள், போலி கைது வாரண்டுகள், போலி சிபிஐ அதிகாரிகள் என மிகப்பெரிய ஏமாற்று நாடகத்தை அரங்கேற்றி ஓஸ்வாலை ஏமாற்றியிருக்கிறது ஒரு கும்பல்.

கிட்டத்தட்ட சூர்யா நடிப்பில் வெளியான தமிழ் திரைப்படமான ‘தானா சேர்ந்த கூட்டம்’ பட பாணியில், சிபிஐ அதிகாரிகள் போன்று வேடமிட்டு குற்றச்செயலை அரங்கேற்றியுள்ளனர்.

எஸ்.பி.ஓஸ்வால், இந்தியாவின் மிகப்பெரிய ஜவுளி உற்பத்தியாளரான வர்தமான் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆவார்.

By admin