• Tue. Oct 28th, 2025

24×7 Live News

Apdin News

ப்ரீ-எக்ளாம்ப்சியா என்பது என்ன? கர்ப்பிணிகளை 20-வது வாரத்திற்கு பின் அச்சுறுத்தும் ஆபத்து

Byadmin

Oct 28, 2025


ப்ரீ-எக்ளாம்ப்சியா

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழ்

‘சரிவர கண்காணிக்காவிட்டால் இறப்பு கூட நேரிடலாம்,’ என கர்ப்பிணிகள் பலருக்கும் ஏற்படும் ப்ரீ-எக்ளாம்ப்சியா எனப்படும் பிரச்னை குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஆனால், இது ஏற்படுவதற்கான தெளிவான காரணம் கண்டறியப்படவில்லை என்றும், முழுமையாக தடுப்பதற்கான வழிமுறைகளும் இல்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

ப்ரீ-எக்ளாம்ப்சியா உலகம் முழுவதிலும் 2-8% கர்ப்பிணிகளை பாதிப்பதாக, உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. ஆண்டுதோறும் சுமார் 46,000 கர்ப்பிணிகள் இதனால் இறக்கின்றனர், சுமார் 50,000 சிசுக்கள் அல்லது பச்சிளம் குழந்தைகள் இறக்கின்றன. ஆசியாவில் சுமார் 10% கர்ப்பிணிகளின் இறப்புக்கு ப்ரீ-எக்ளாம்ப்சியா காரணமாக உள்ளது.

“பெரும்பாலும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு முதல் காரணமாக ப்ரீ-எக்ளாம்ப்சியா உள்ளது. இரண்டாவதாக, ரத்தப்போக்கு உள்ளது.” என்கிறார் மகப்பேறு மருத்துவர் உமையாள்.

இது ஏன் ஏற்படுகிறது, அறிகுறிகள், கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இங்கே அறியலாம்.



By admin