• Tue. Oct 8th, 2024

24×7 Live News

Apdin News

ப்ரோக்கோலி சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து குறையுமா?

Byadmin

Oct 8, 2024


ப்ரோக்கோலி, புற்றுநோய்

பட மூலாதாரம், Getty Images

நமது சிறுவயதிலிருந்தே காய்கறிகள், கீரைகளைச் சாப்பிடுமாறு பெரியவர்கள் நமக்கு அறிவுறுத்துவார்கள்.

அந்த அறிவுரையைப் பின்பற்றுவதற்கு மிக முக்கியமான காரணம் இருக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றுடன் கூடிய நல்ல உணவு நமது ஆரோக்கியத்துக்கு முக்கியமானது என்று நமக்குத் தெரியும். ஆனால் அவற்றில் சில உணவுகள் உங்களைப் புற்றுநோயிலிருந்து காப்பாற்றக் கூடும் என்று உங்களுக்குத் தெரியுமா?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ப்ரோக்கோலி, புற்றுநோய்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ப்ரோக்கோலி வயிறு, குடல் ஆகியவற்றில் ஏற்படும் பிரச்னைகளையும் சீராக்க உதவுகிறது என்று கண்டறியப்பட்டது

ப்ரோக்கோலியில் அப்படி என்ன இருக்கிறது?

முட்டைகோஸ், காலிபிளவர் போன்ற இலைதழை மிக்க ஒரு காய்கறிதான் (cruciferous vegetable) ப்ரோக்கோலி. பார்ப்பதற்கு பச்சைநிற காலிபிளவர் போன்ற இதற்கு புற்றுநோய் ஏற்படுவதை குறைக்கும் தன்மை இருக்கிறது, என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

By admin