• Sat. Apr 19th, 2025

24×7 Live News

Apdin News

ப்ளூ ஆரிஜின்: விண்வெளி பயணத்தை நிறைவு செய்தது மகளிர் குழு – சாதித்தது என்ன?

Byadmin

Apr 14, 2025


விண்வெளிக்கு பயணம் செல்லும் அனைத்து மகளிர் குழு - விண்வெளி சுற்றுலாவில் புதிய மைல் கல்

பட மூலாதாரம், BLUE ORIGIN

நியூ ஷெப்பர்ட் ராக்கெட், 6 பெண்களை ஏற்றிக்கொண்டு அமெரிக்காவின் மேற்கு டெக்ஸாஸில் இருந்து புறப்பட்டது. 11 நிமிட விண்வெளி பயணத்தை இவர்கள் மேற்கொண்டனர்.

பாடகி கெட்டி பெர்ரியுடன் தொழிலதிபர் ஜெஃப் பெசோசின் காதலி லாரன் சான்செஸ் மற்றும் சிபிஎஸ் தொலைகாட்சியின் தொகுப்பாளர் கேல் கிங், நாசாவின் ராக்கெட் விஞ்ஞானி ஆயிஷா போவே, மனித உரிமை ஆர்வலர் அமாண்டா இங்குயென் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் கேரியன் ஃப்ளின் ஆகியோரும் விண்வெளிக்குச் சென்றனர்.

ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆரிஜின் நிறுவனம் இந்த விண்வெளி பயணத்தை ஏற்பாடு செய்தது.

புளூ ஆரிஜின், விண்வெளி பயணம், கெட்டி பெர்ரி

பட மூலாதாரம், Blue Origin

படக்குறிப்பு, 6 பெண்களுடன் விண்ணில் பறந்த விண்கலம்

இந்த விண்வெளி பயணம் 11 நிமிடங்களை உள்ளடக்கியது. இந்த விண்கலம், ஆறு பெண்களையும் பூமியின் வளிமண்டலத்துக்கு அப்பால் இருக்கும் கார்மன் எல்லைக் கோடு வரை சென்றனர்.

By admin