• Mon. Apr 28th, 2025

24×7 Live News

Apdin News

மகன்களுக்கு ஒன்றாக திருமணம் நடத்திய இந்து, முஸ்லிம் நண்பர்கள். ராஜஸ்தானில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

Byadmin

Apr 28, 2025


தங்களின் மகன்களுக்கு ஒரே மேடையில் திருமணம் நடத்திய இந்து இஸ்லாமிய நண்பர்கள், கோட்டா, ராஜஸ்தான்

பட மூலாதாரம், Mohar Singh Meena

ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டாவில் வசித்து வரும் ஒரு இந்து-முஸ்லிம் நண்பர்களின் 40 ஆண்டு கால நட்பு எல்லோருக்கும் ஒரு நிகரற்ற உதாரணமாகத் திகழ்கிறது.

ஒரு இந்து மற்றும் ஒரு முஸ்லிம் தங்களின் மகன்களின் திருமணத்திற்கு ஒரே பத்திரிக்கையை அச்சிட்டு ஒரே வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.

அப்துல் ரௌஃப் அன்சாரி மற்றும் விஷ்வஜீத் சக்ரபர்தி குடும்பத்தினர் எல்லோரும் பிரமிப்புடன் பேசும் விதத்தில் அவர்களுடைய உறவை கொண்டாடியுள்ளனர்.

அப்துல் ரௌஃப் அன்சாரியின் மகன் யூனுஸ் பர்வேஸின் திருமணமும் விஷ்வஜீத் சக்ரபர்தியின் மகன் சௌரப்-ன் திருமணமும் சமீபத்தில் நடைபெற்றது. இருவரின் திருமணத்திற்கும் ஒரே பத்திரிக்கை அச்சிடப்பட்டு ஒரே வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

By admin