• Thu. Sep 18th, 2025

24×7 Live News

Apdin News

மகளிர் சுயஉதவிக் குழு அடையாள அட்டை மூலம் கோ-ஆப்டெக்ஸ், ஆவின், இ-சேவை மையங்களில் சலுகை | Discounts at Co optex, Aavin and e service centers through Women Self Help Group ID card

Byadmin

Sep 18, 2025


சென்னை: மகளிர் சுயஉதவிக் குழு அடை​யாள அட்டை மூலம் கோ-ஆப்​டெக்​ஸ், ஆவின், இ-சேவை மையங்களில் சலுகைகள் வழங்​கப்பட உள்​ளன. இதற்​காக அடுத்த 9 மாதத்​துக்​குள் அனைத்து சுயஉதவிக் குழு மகளிருக்​கும் அடை​யாள அட்டை வழங்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ள​து. தமிழகத்​தில் மொத்​தம் 4.76 லட்​சம் சுயஉதவிக் குழுக்​கள் உள்​ளன. இதில் 54 லட்​சம் பெண்​கள் உறுப்​பினர்​களாக உள்​ளனர்.

இந்​நிலை​யில் சுயஉதவிக் குழு மகளிரின் வாழ்க்​கையை மேம்​படுத்​தும் நோக்​கத்​துடன் உறுப்​பினர்​களுக்கு அடை​யாள அட்டை வழங்​கப்​படும் என கடந்த மார்ச் மாதம் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறி​வித்​தார்.

அதன்​படி சேலத்​தில் நடந்த விழா​வில், துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் கலந்​து​கொண்​டு, மகளிர் சுயஉதவிக் குழுக்​களுக்கு அடை​யாள அட்​டைகள் வழங்​கும் நிகழ்வை தொடங்கி வைத்​தார். அதைத்​தொடர்ந்து தமிழகத்​தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்​களில் உள்ள பெண்​களுக்கு அடை​யாள அட்டை வழங்​கும் பணி வேக​மாக நடை​பெற்று வரு​கிறது.

இதுதொடர்​பாக தமிழ்​நாடு மகளிர் மேம்​பாட்டு நிறுவன அதி​காரி கூறிய​தாவது: தமிழகத்​தில் அடுத்த 9 மாதங்​களில் அனைத்து மகளிர் சுயஉதவிக் குழு பெண்​களுக்​கும் அடை​யாள அட்டை வழங்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த அட்​டைகளைப் பயன்​படுத்தி மகளிர் சுயஉதவிக் குழுக்​கள் தங்​களு​டைய தயாரிப்​பு​களில் 25 கிலோ எடை​யுள்ள பொருட்​களை அரசு பேருந்​துகளில் 100 கி.மீ. வரை கட்​ட​ணம் இல்​லாமல் எடுத்​துச் செல்​லலாம்.

அதே​போல் கூட்​டுறவு, உணவு மற்​றும் நுகர்​வோர் பாது​காப்​புத் துறை வழங்​கும் பயிர் கடன், கால்​நடை கடன், சிறு வணி​கக் கடன், தொழில்​முனை​வோர் கடன், மாற்​றுத்​திற​னாளி​கள் கடன் போன்​றவற்​றில் முன்​னுரிமை வழங்​கப்​படும்.

10% சேவை கட்​ட​ணம் குறைப்பு கோ-ஆப்​டெக்​ஸில் 5 சதவீத தள்​ளு​படி, ஆவின் கடைகளில், இ-சேவை மையங்​களில் 10 சதவீத சேவை கட்​ட​ணம் குறைப்பு போன்ற சலுகைகளும் இதன்​மூலம் கிடைக்​கும். மேலும் இந்த அட்​டை, முதலமைச்​சரின் மருத்​துவ காப்​பீடுத் திட்​டத்​தின் அட்​டைக்கு முதன்மை ஆதா​ர​மாக​வும் எடுத்​துக் கொள்​ளப்​படும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்​.



By admin