• Mon. Oct 14th, 2024

24×7 Live News

Apdin News

மகளிர் டி20 உலகக்கோப்பை: இந்தியாவுக்கான அரையிறுதிக் கதவை பாகிஸ்தான் திறக்குமா?

Byadmin

Oct 14, 2024


டி20 உலகக்கோப்பை, இந்தியா, பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹர்மன்பிரீத்சிங் கவுர், இந்திய கிரிக்கெட் அணி

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறுமா அல்லது முதல் சுற்றோடு தாயகம் திரும்புமா என்பது இன்று நடக்கும் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கடைசி லீக் ஆட்டத்தில்தான் தெரிந்துவிடும்.

இந்திய அணியை அரையிறுதிக்கும் அனுப்புவதும் அல்லது தாயகம் அனுப்புவதும் பாகிஸ்தான் வசம்தான் இருக்கிறது. இந்திய அணி கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் தோற்றாலும் அதன் அரையிறுதி வாய்ப்பு முடிந்துவிடவில்லை.

ஐசிசி டி20 மகளிர் உலகக் கோப்பைத் தொடரில் குருப் ஏ பிரிவில் இடம் பெற்ற இந்திய அணியோடு, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளன.

இந்தியா அடுத்தடுத்து வெற்றி

இதில் இந்திய மகளிர் அணி தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் தோற்று நிகர ரன்ரேட்டில் பின்தங்கியிருந்தது. ஆனால், பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து பிரமாண்ட வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் 2 வது இடத்துக்கு முன்னேறியது. ஆனால், அரையிறுதி செல்லக்கூடிய முக்கியமான நேற்று நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியிடம் 9 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்றது.

By admin