• Fri. Oct 4th, 2024

24×7 Live News

Apdin News

மகாராஷ்டிராவில் நாட்டு பசுமாடுகளுக்கு ‘ராஜமாதா’ அந்தஸ்து- ஆனால், விவசாயிகள் கோபப்படுவது ஏன்?

Byadmin

Oct 4, 2024


மகாராஷ்டிராவில் நாட்டு பசுமாடுகளுக்கு 'ராஜமாதா' அந்தஸ்து

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பசுக்களுக்கு ராஜமாதா அந்தஸ்து வழங்கியதன் பொருள் என்ன?

“ராஜமாதா அந்தஸ்து அறிவித்திருப்பதால் நாங்கள் இனி வாழ்க்கை முழுவதும் பசுவின் வாலைப் பிடித்துக் கொண்டு அதன் பின்னால் நடக்க வேண்டுமா? விவசாயிகளுக்கு மீதமிருக்கும் வேலை இது மட்டும் தானா?”

”பால் சுரக்காத பசுமாடுகளை விற்பனை செய்ய அரசு அனுமதிக்கவில்லை என்றால், அந்த மாடுகளை முதல்வர் வீட்டுக்கு வெளியே கட்டிப்போடுவோம், எங்களுக்கு வேறு வழியில்லை” என்கிறார் பால் வியாபாரி விலாஸ் போடே.

அரசின் மீதான அவரின் கோபத்தை பிரதிபலிக்கும் வார்த்தைகள் இவை.

மகாராஷ்டிராவின் நாக்பூரில் அம்பேத்கர் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள சிவன்காவ்னை சேர்ந்த இவரது குடும்பம் 80 ஆண்டுகளாக பால் வியாபாரம் செய்து வருகிறது.

By admin