• Mon. Jan 27th, 2025

24×7 Live News

Apdin News

மகாராஷ்டிரா: கபடி விளையாட்டு இந்த கிராமத்துப் பெண்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்டது எப்படி?

Byadmin

Jan 27, 2025


காணொளிக் குறிப்பு,

கிராமத்துப் பெண்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்ட ‘கபடி’ விளையாட்டு

சராசரி கிராமத்து வாழ்க்கையை விட்டுவிட்டு பதக்கங்கள், இப்போது சாம்பியன்ஷிப்கள் பற்றிக் கனவு காண துணிகிறார். மீனா மேற்கு இந்தியாவின் ஒரு மூலையில் இருக்கும் சிறிய பழங்குடி குக்கிராமத்தில் வசிக்கிறார்.

மின்சாரம் இல்லாத, மொபைல் போன்கள் அரிதாகவே வேலை செய்யும் இடத்தில், இணைய வசதி இன்னும் தொலைதூரக் கனவாகவே உள்ளது.

அவர்களின் அம்மாக்களைப் போலவே, வீட்டு வேலைகள், திருமணம் மற்றும் குழந்தைகளைத் தாண்டிய வாழ்க்கையை பெண்கள் அரிதாகவே பார்த்திருக்கிறார்கள்.

15 ஆண்டுகளுக்கு முன் ஒரு சில பள்ளி ஆசிரியர்கள், பயிற்சியாளர்களால் முதல் பெண்கள் கபடி அணி உருவாக்கப்பட்டது. அது இவர்களின் வாழ்க்கையையே மாற்றியது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin