• Fri. Jan 10th, 2025

24×7 Live News

Apdin News

மகாராஷ்டிரா: திருமண நாளை கொண்டாடிவிட்டு தற்கொலை செய்துகொண்ட தம்பதி – என்ன காரணம்?

Byadmin

Jan 10, 2025


மகாராஷ்டிரா வழக்கு, மனநலம்,

பட மூலாதாரம், UGC

எச்சரிக்கை: இதில் இடம்பெறும் தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்

திருமண நாளன்று, 26 ஆண்டுகளுக்கு முன்பு திருமணத்தின்போது அணிந்திருந்த ஆடைகளை உடுத்தி தம்பதியினர் தங்களின் வாழ்க்கையை முடித்துக் கொண்டனர்.

இறப்பதற்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர்கள், “நாங்கள் செல்கிறோம். நீங்கள் உங்களை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். நாங்கள் சென்ற பிறகு நீங்கள் அழக்கூடாது,” என்று கூறியுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் நகரத்தில் அமைந்திருக்கும் மார்ட்டின் நகரைச் சேர்ந்தவர்கள் ஜெரில்-ஆனி தம்பதி. வேலையின்மையாலும், குழந்தை இல்லாத காரணத்தாலும் அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

By admin