• Sun. Nov 24th, 2024

24×7 Live News

Apdin News

மகாராஷ்டிரா: பாஜக மக்களவைத் தேர்தல் சரிவை ஐந்தே மாதங்களில் சரி செய்தது எப்படி? 5 முக்கிய விஷயங்கள்

Byadmin

Nov 24, 2024


நரேந்திர மோதி, ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிரா தேர்தல்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, பாஜக இத்தேர்தலில் 149 இடங்களில் போட்டியிட்டது

  • எழுதியவர், சுசீலா சிங் & முகமது ஷாஹித்
  • பதவி, பிபிசி செய்தியாளர்

இந்தாண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், மகாராஷ்டிராவில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் மகா விகாஸ் அகாடி அதிக இடங்களை கைப்பற்றியது. அதனால், சட்டமன்ற தேர்தலிலும் இக்கூட்டணி வெற்றி பெறும் என கருதப்பட்டது.

ஆனால், இந்த கணிப்பு தவறானது என ஹரியாணாவில் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுவிட்டது. அது மகாராஷ்டிராவிலும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றுள்ளது. பாஜக இத்தேர்தலில் 145 தொகுதிகளில் போட்டியிட்டதில் 132 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.

மக்களவைத் தேர்தலின் போது மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 மக்களவை தொகுதிகளில், மகா விகாஸ் அகாடி கூட்டணி 30 தொகுதிகளை கைப்பற்றியது. பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணிக்கு 18 இடங்களே கிடைத்தன. அத்தேர்தலில் தான் போட்டியிட்ட 23 தொகுதிகளில் 9 தொகுதிகளை மட்டுமே வென்றது பாஜக.

By admin