• Fri. Apr 24th, 2026

24×7 Live News

Apdin News

மகாராஷ்டிரா: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டது ஏன்?

Byadmin

Apr 24, 2026


மாலேகான்

பட மூலாதாரம், Getty Images

31 பேர் பலியாகவும், 300-க்கும் மேற்பட்டோர் காயமடையவும் காரணமான 2006 மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு நபர்களை ஏப்ரல் 22, புதன்கிழமை அன்று மும்பை உயர்நீதிமன்றம் விடுவித்தது.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான விசாரணையைத் தொடங்குவதற்குக்கூட போதுமான ஆதாரங்கள் இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது.

இந்த குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடத்திய தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் பயங்கரவாத எதிர்ப்புப் படை ஆகிய இரு அமைப்புகளும் “நேர் எதிரான கதைகளை” முன்வைத்ததாக நீதிமன்றம் கூறியது.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான வழக்கில் ” முரண்பாடு” இருப்பதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு வரும் நிலைதான் ‘விடுவிப்பு’ என்பது. ஒரு குற்றப்பத்திரிகையைப் பார்க்கும் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக விசாரணையைத் தொடர போதுமான ஆதாரங்கள் இருக்கிறதா என்று பார்க்கும். போதிய ஆரம்பக்கட்ட ஆதாரங்கள் இல்லை என்று நீதிமன்றம் கருதினால், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்கும்.

By admin