• Sat. Jan 11th, 2025

24×7 Live News

Apdin News

மகாராஷ்டிரா: 6 கிராமங்களில் திடீர் முடி உதிர்வால் மக்கள் அச்சம் – என்ன காரணம்?

Byadmin

Jan 11, 2025


மகாராஷ்டிரா, முடி உதிர்வு

பட மூலாதாரம், BBC/NiteshRaut

படக்குறிப்பு, பாண்ட்கான், கல்வாட், கதோரா ஆகிய கிராமங்களில் முடி கொட்டும் பிரச்னை அதிகரித்து, ஒருவித அச்சம் பரவியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், புல்தானா மாவட்டத்தில் உள்ள ஆறு கிராமங்களில் சிலருக்கு திடீரென அதீத முடி உதிர்வு ஏற்பட்டு, தலை வழுக்கையாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

புல்தானா மாவட்டம், ஷேகான் தாலுகாவில் உள்ள பாண்ட்கான், கல்வாட், கதோரா ஆகிய கிராமங்களில் முடி கொட்டும் பிரச்னை அதிகரித்து, ஒருவித அச்சம் பரவியுள்ளது.

இது தொடர்பாக உள்ளூர் சுகாதாரத் துறையினர் ஆய்வு நடத்தி இந்த திடீர் முடி உதிர்வுக்கான காரணங்களைக் கண்டறிய முயன்றுள்ளனர்.

இந்த கிராமத்தில் வசிப்பவர்கள், முடி உதிர்தல் நாளடைவில் அதிகமாகி, சில நாட்களில் முற்றிலும் வழுக்கையாகி விடுவதாக கூறுகின்றனர்.

By admin