• Mon. Apr 21st, 2025

24×7 Live News

Apdin News

மகாறம்பைக்குளத்தில் தமிழரசுக் கட்சியின் தேர்தல் அலுவலகம் திறப்பு (படங்கள் இணைப்பு)

Byadmin

Apr 21, 2025


இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதேச தேர்தல் காரியாலயம் வவுனியா – மாகறம்பைக்குளம் பிரதான வீதியில் இன்று திறந்துவைக்கப்பட்டது.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான பிரச்சாரப் பணிகள் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபைக்குட்பட்ட மகாறம்பைக்குளம் வட்டாரத்தில் தமிழரசுக் கட்சி சார்பாக சி.சந்திரசேகரம் நேரடி வேட்பாளராகப் போட்டியிடுவதுடன், பா.ஆனந், ரா.நித்தியா ஆகியோர் பட்டியல் வேட்பாளராகவும் போட்டியிடுகின்றனர்.

அவர்களது பிரதேச தேர்தல் அலுவலகம் மகாறம்பைக்குளம் பிரதான வீதியில் திறந்து வைக்கப்பட்டது. இதன்போது தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம், கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

The post மகாறம்பைக்குளத்தில் தமிழரசுக் கட்சியின் தேர்தல் அலுவலகம் திறப்பு (படங்கள் இணைப்பு) appeared first on Vanakkam London.

By admin