• Fri. Jan 31st, 2025

24×7 Live News

Apdin News

மகா கும்பமேளா: கூட்ட நெரிசல் ஏற்பட்டது எப்படி? நேரில் கண்டவர்கள் கூறியது என்ன?

Byadmin

Jan 29, 2025


மகா கும்பமேளா கூட்ட நெரிசல், பிரயாக்ராஜ்
படக்குறிப்பு, டெல்லியில் இருந்து வந்த உமேஷ் அகர்வால் என்ற பக்தர் கூட்ட நெரிசல் எப்படி தொடங்கியது என்று கூறியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடக்கும் மகா கும்பமேளாவில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இந்த கும்பமேளாவின் போது பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடுவது வழக்கம்.

திரிவேணி சங்கமத்தில் புதன்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் மௌனி அமாவாசையின் புனித நீராடலின் போது, போது பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

அதில் பலர் இறந்திருக்கலாம் என்றும், மேலும் பலருக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

By admin