• Thu. Jan 16th, 2025

24×7 Live News

Apdin News

மகா கும்பமேளா: நாகா துறவி ஆவதற்கான செயல்முறை என்ன? அவர்கள் எங்கு வாழ்கிறார்கள்?

Byadmin

Jan 16, 2025


 கும்பமேளா, நாகா துறவி, அகரா, இந்து மதம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒவ்வொரு அகராவும், அதன் உச்சத் தலைவரான ஒரு மகாமண்டலேஷ்வரால் நிர்வகிக்கப்படுகிறது

பிரமாண்டமான ரதங்கள், யானைகள், ஒட்டகங்கள், குதிரைகள், எஸ்யூவி வாகனங்கள், வாள்கள், திரிசூலங்கள், சில நேரங்களில் கைகளில் துப்பாக்கிகள் மற்றும் பிரத்யேக உடற்பயிற்சிகளின் அரங்கேற்றம்…

இவை கும்பமேளாவின்போது தென்பட்ட காட்சிகள்.

பொதுவாக, வட இந்தியாவில் ‘அகரா’ (Akhara) என்ற வார்த்தையைக் கேட்கும்போது, மல்யுத்தம் அல்லது மல்யுத்த மைதானம் மற்றும் அதற்கான பயிற்சிகள் குறித்தே நினைவுக்கு வரும். ஆனால் கும்பமேளாவின்போது, அகரா என்பது சாது-துறவிகளின் பாரம்பரியத்துடன் தொடர்புடையது.

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் திரிவேணி நதி சங்கமிக்கும் இடத்திலும், உத்தராகண்டில் உள்ள ஹரித்வாரிலும், மகாராஷ்டிராவில் நாசிக்கில் கோதாவரி ஆற்றின் கரையிலும், மத்திய பிரதேசத்தில் உஜ்ஜயினில் ஷிப்ரா நதிக்கரையிலும் கும்பமேளா நடைபெறுகிறது.

By admin