• Mon. Jul 6th, 2026

24×7 Live News

Apdin News

‘மக்கள் சாட்சி’: லஞ்சப் புகார் அளிக்க தனி இணையதளம் தொடங்கிய மென்பொறியாளர் ?

Byadmin

Jul 6, 2026


‘மக்கள் சாட்சி’ இணையதளம், ஊழல், லஞ்சம், தமிழ்நாடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

    • எழுதியவர்,
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

‘புதிய மின் இணைப்பு பெற விண்ணப்பித்தால் 30,000 ரூபாய் லஞ்சம் கேட்கிறார்கள்’, ‘பஞ்சாயத்து எழுத்தர் பதவி நியமனத்துக்காக, சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் 15 லட்சம் ரூபாய் கேட்கிறார்’, ‘பட்டா பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பித்தால் 2,500 ரூபாய் பணம் கேட்கிறார்கள்’…

இதுபோன்ற 900க்கும் மேற்பட்ட புகார்கள் ‘மக்கள் சாட்சி’ என்ற இணையதளத்தில் பதிவாகியுள்ளன. ஆனால், இது அரசு இணையதளம் அல்ல, தனி நபர் ஒருவரால் உருவாக்கப்பட்டது.

இதை உருவாக்கியுள்ள சென்னை சித்தாலப்பாக்கத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான தீபக் சிவக்குமார், “ஊழலுக்கு எதிரான நோக்கத்துடன் மக்கள் சாட்சி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இது அலுவலகம் வாரியாக, மாவட்டம் வாரியாக மற்றும் பிரிவு வாரியாக பெயர் குறிப்பிடாமல் புகார்களை பதிவு செய்வதற்கான ஒரு பொதுத் தளமாகும்” என்கிறார்.

ஆனால், தனி நபர் உருவாக்கிய இணையதளத்தில் அரசு அதிகாரிகள் குறித்த புகார்களை பொது மக்கள் பதிவு செய்வதில், தரவுகள் கசிவது அல்லது தரவுகள் தவறாக பயன்படுத்தப்படுவதற்கான ஆபத்துகள் உள்ளன என, சைபர் தொழில்நுட்ப வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அதேசமயம், இதுபோன்ற முன்னெடுப்புகள் சட்டரீதியாக தவறு இல்லை, ஆனால் அதை அரசு எடுத்து செய்ய வேண்டும் என்றும் சட்ட நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.

By admin