• Fri. Feb 14th, 2025

24×7 Live News

Apdin News

மக்கள் செல்வன் ‘ விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ஜென்டில்வுமன் ‘படத்தின் கிளர்வோட்டம்

Byadmin

Feb 13, 2025


‘ஜெய் பீம் ‘ புகழ் நடிகை லிஜோமோல் ஜோஸ் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ ஜென்டில்வுமன்’ எனும் திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி மற்றும் மலையாள நடிகை பார்வதி ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் ஜோசுவா சேதுராமன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘ ஜென்டில்வுமன் ‘ எனும் திரைப்படத்தில் லிஜோமோல் ஜோஸ், லொஸ்லியா, ஹரிகிருஷ்ணன், கருணாகரன், ராஜீவ் காந்தி, தாரணி, வைர பாலன், நந்திதா ஸ்ரீ குமார் , சுதேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சா. காத்தவராயன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். இரண்டு பெண்களின் கதையை வித்தியாசமாக காட்சிப்படுத்தி இருக்கும் இந்த திரைப்படத்தை கோமளா ஹரி பிக்சர்ஸ் மற்றும் ஒன் ட்ராப் ஓசோன் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கோமளா ஹரி ,ஹரி பாஸ்கரன்,  பி. என். நரேந்திர குமார், லியோ லோகம் நேதாஜி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

எதிர்வரும் மார்ச் மாதம் ஏழாம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.  இதில் இரண்டு பெண்களின் வாழ்வியல் ஒரே தருணத்தில் திரையில் காட்சிப்படுத்தி இருக்கும் விதமும், இதற்கான பின்னணி இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. அத்துடன் பெண்கள் தொடர்பான ஆணாதிக்கச்  சிந்தனையுடன் கூடிய வசனங்களும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

By admin