0
நடிகர் தர்ஷன் கதையின் நாயகனாக கம்பீரமான காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்திருக்கும் ‘சரண்டர்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் கௌதமன் கணபதி இயக்கத்தில் உருவாகி வரும் ‘சரண்டர்’ எனும் திரைப்படத்தில் தர்ஷன், லால், சுஜித் சங்கர் , முனீஸ்காந்த், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் என்ற திரைப்படத்திற்கு விகாஸ் பதீசா இசையமைத்திருக்கிறார். கிரைம் வித் எக்சன் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அப்பீட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தருணத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதில் கதையின் நாயகனான தர்ஷன் காவல்துறையின் சீருடை அணிந்து கம்பீரமாக அமர்ந்திருப்பதும், அதன் பின்னணியில் லால் மற்றும் சுஜித் சங்கர் ஆகிய நடிகர்களின் வித்தியாசமான தோற்றமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.